திமுக அரசின் வெற்று அறிவிப்புதான் வேளாண் பட்ஜெட் - பாஜக அண்ணாமலை.! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு சட்டப்பேரவையில் இன்று காலை 10 மணி முதல் வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான தனி வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

இதில், 2023 - 2024 ஆம் ஆண்டுக்கான விவசாயிகளுக்கான வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்கள் மற்றும் அறிவிப்புகளை வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் அறிவித்தார்.

இந்த நிலையில் விவசாயிகள் குறித்து எண்ணாமல் இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருப்பதாக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ட்விட்டரில் விமர்சனம் செய்துள்ளார்.

அந்த பதிவில் "உணவளிக்கும் விவசாயிகள் செழித்தால், உலகம் செழிக்கும். ஆனால், நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 2500 ஆகவும், கரும்புக்கு குறைந்தபட்ச ஆதார விலை ரூபாய் 4000 ஆகவும் ‘உயர்த்துவோம்’ என்று போலி தேர்தல் வாக்குறுதி கொடுத்து ஆட்சிக்கு வந்த திமுக அரசு, 3வது ஆண்டிலும், சற்றும் கவலையில்லாமல், விவசாயி நலன் குறித்து எண்ணாமல், இந்த நிதிநிலை அறிக்கையிலும் வெற்று அறிவிப்புகள் கொடுத்து ஏமாற்றி இருக்கிறது. விவசாயிகள் எத்தனை ஆண்டுகள் காத்திருக்க வேண்டும் என்பதற்கு திறனற்ற திமுக பதில் அளிக்குமா?" என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP Annamalai tweet about TN agriculture budget 2023


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->