மத்திய அமைச்சராகிறார் அண்ணாமலை? மாறுகிறது மத்திய அமைச்சரவை! பரபரப்பு தகவல்! 
                                    
                                    
                                   BJP Annamalai May be central minister 
 
                                 
                               
                                
                                      
                                            தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை, கடந்த மாத இறுதியில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார். இதனையடுத்து அடுத்த 2 நாட்களில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியும் அவரை சந்தித்தது, இரு தரப்பிடையே மீண்டும் கூட்டணி உருவாகும் வாய்ப்புகள் குறித்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.  
ஆனால், அதிமுகவுடன் கூட்டணி என்றால், தலைவர் பதவியில் நீடிக்கமாட்டேன் என்ற அண்ணாமலை முன்னதாக கூறியிருந்தார். இதைத்தான் அமித்ஷாவிடம் எடப்பாடி எடுத்துக் கூறியதாகவும், அண்ணாமலையை மாற்றினால்தான் கூட்டணி பேசலாம் என வலியுறுத்தியதாகவும் தகவல்கள் வெளியாகின.  
இதையடுத்து, அண்ணாமலையை விலக்கும் முயற்சிகள் டெல்லியில் தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக சொல்லப்பட்ட நிலையில், நேற்று கோவையில் பேசிய அண்ணாமலை, “பாஜக மாநில தலைவர் போட்டியில் நான் இல்லை” என தெரிவித்தார். இதன் மூலம் வெளியான தகவல்கள் உறுதியாகியுள்ளது.
இந்த நிலையில், பா.ஜ.க. வட்டாரத்தில், அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மேலும், இந்த கோரிக்கைக்கு முன்பே மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்க உள்ளதாகவும், இதில் அவருக்கு மத்திய அமைச்சர் பதவி உறுதியாகி விட்டதாக ஒரு தகவல் வெளியாகி இருந்தது.
எது எப்படி ஆனாலும் வரும் ஏப்ரல் 11-ம் தேதி சென்னையில் நடைபெறும் பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டத்தில், புதிய மாநில தலைவர் குறித்த இறுதி முடிவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகலாம் என்ற உறுதியான ஒரு தகவலும் வெளியாகியுள்ளது.
 
                                     
                                 
                   
                       English Summary
                       BJP Annamalai May be central minister