அதிமுக - பாஜகவினரிடையே மோதல் - கோவையில் பரபரப்பு.!
bjp and admk clash in coimbatore
வருகிற 19-ம் தேதி மக்களவை தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சியினரும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில், நேற்று கோவை தொகுதியில் தொட்டிபாளையத்தில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன், சூலூர் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகள் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்தனர்.
அதே பகுதிக்கு பாஜக வேட்பாளர் அண்ணாமலையும் வாக்கு சேகரிக்க வந்துள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக பாஜகவினரின் வாகனம், அதிமுகவின் வாகனத்தை உரசி விட்டு நிற்காமல் சென்றதனால், ஆத்திரமடைந்த அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பிரசார வாகனத்தில் இருந்து இறங்கி பாஜகவினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அதன் பின்னர், அண்ணாமலையின் பிரசார வாகனத்தை சிறைபிடித்து சாலையில் படுத்து அதிமுக வேட்பாளரும், அதிமுகவினரும் மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்து விரைந்து வந்த போலீசார், அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர்.

அப்போது, அதிமுகவினர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் தாங்கள் பிரசாரம் செய்து வருவதாகவும், ஆனால், பாஜகவினர் மாதப்பூர் பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கடந்து பிரசாரத்தில் ஈடுபட்டதாக குற்றம்சாட்டினர்.
மேலும், பாஜகவினருக்கு காவல்துறை ஆதரவு தருவதாகவும் பகிரங்கமாக குற்றம் சாட்டினர். பின்னர், இருதரப்பையும் சமாதானம் செய்து அங்கிருந்து அனுப்பி வைத்தனர். பிரசாரத்தின் போது, அதிமுக – பாஜகவினரிடையே ஏற்பட்ட மோதலால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
English Summary
bjp and admk clash in coimbatore