டெல்லி போல தமிழகத்தில் திமுகவின் ஆட்சியை வீழ்த்துவோம் - அமித் ஷா!
BJP amitsha 2026 Assembly Election DMK ADMK
மதுரையில் இன்று நடைபெறும் பாஜக கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசினார். உரையின் தொடக்கத்தில், “மதுரை மண்ணை வணங்கி, மீனாட்சி அம்மனுக்கு வணக்கம் செலுத்துகிறேன்” என குறிப்பிட்டார்.
அதன்பின்னர், ஜூன் 22ஆம் தேதி நடைபெறும் முருக பக்தர் மாநாட்டை சிறப்பாக நடத்த பாஜகவினருக்கு கேட்டுக்கொண்டார். “தமிழ்நாட்டிற்கு வந்து உங்களிடம் தமிழில் பேச முடியாமல் இருப்பது எனக்கு வருத்தமளிக்கிறது,” என்றார்.
தமிழக முதலமைச்சர் கூறும், “அமித் ஷாவால் எங்களை தோற்கடிக்க முடியாது,” என்ற வாக்கியம் குறித்து, “தமிழக மக்கள் அவர்களை தோற்கடிப்பார்கள்” என பதிலடி கொடுத்தார்.
“2026ல் அதிமுக–பாஜக என்டிஏ கூட்டணி ஆட்சி அமைக்கும். திமுக ஆட்சி தூக்கி எறியப்படும். டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சியை வீழ்த்தியதுபோல், திமுக ஆட்சியையும் மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள்” என்றும் வலியுறுத்தினார்.
பாகிஸ்தானுக்குள் புகுந்து பயங்கரவாதிகளை அழித்ததும், பஹல்காமில் தாக்கிய பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்ததும் மோடி தலைமையிலான ஆட்சியின் தன்னிறைவு உணர்வைக் காட்டும் என கூறினார்.
“2026 தமிழக தேர்தல் பாஜகவுக்கு முக்கியமானது. மகாராஷ்டிரா, டெல்லி போன்ற மாநிலங்களை போலவே, தமிழ்நாட்டிலும் வெற்றிபெறுவதற்கான நிலை உருவாகிவிட்டது” என அமித் ஷா உறுதிபடத் தெரிவித்தார்.
English Summary
BJP amitsha 2026 Assembly Election DMK ADMK