பைக் மீது மினி வேன் மோதி விபத்து - தொழிலாளி உயிரிழப்பு - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலையில் மாவட்டத்தில் பைக் மீது மினி வேன் மோதிய விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் அனாதிமங்கலம் பகுதியை சேர்ந்தவர் தொழிலாளி அய்யப்பன்(45). இவர் பைக்கில் சேத்துப்பட்டியில் இருந்து அனாதிமங்கலம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

அப்பொழுது ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு நோக்கி வந்த மினி வேன் ஒன்று எதிர்பாராத விதமாக அய்யப்பன் பைக் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்த அய்யப்பனை மீட்டு அப்பகுதியில் இருந்தவர்கள் சேத்துப்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக அதுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அங்கு அய்யப்பன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இதையடுத்து இந்த சம்பவம் குறித்து சேத்துப்பட்டு போலீசார், வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Bike minivan accident in Tiruvannamalai


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->