தேசிய நெடுஞ்சாலையில் பைக் சாகசம்: வாலிபரை சுற்றி வளைத்த போலீசார்!
Bike adventure on national highway Police arrested teenager
திருப்பூர், ஊத்துக்குளி அருகே உள்ள கோவை-சேலம் பைபாஸ் சாலையில் தினமும் வாலிபர் ஒருவர் அதிவேகமாக இரு சக்கர வாகனத்தில் செல்வதாகவும் சாகசம் செய்வதாகவும் இதனால் போக்குவரத்து இடையூறு மற்றும் விபத்து அபாயம் ஏற்பாடும் என அப்பகுதி மக்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில் போலீசார் கோயம்புத்தூர் பைபாஸ் சாலையில் கண்காணிப்பில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று அந்த பகுதியில் இரு சக்கர வாகனத்தில் சாகசம் செய்து கொண்டிருந்த வாலிபரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

பின்னர் கைது செய்யப்பட்ட வாலிபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்திய போது அவர் அவிநாசி பகுதியை சேர்ந்த துரைராஜ் (வயது 23) என்பது பைனான்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் இவர் தனது இரு சக்கர வாகனத்தில் அபாயகரமான சாலைகளில் சாகசம் செய்து அதனை வீடியோ எடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்ததும் தெரிய வந்தது.
இதனை அடுத்து போலீசார் வாலிபரின் இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
Bike adventure on national highway Police arrested teenager