பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு- பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்.! - Seithipunal
Seithipunal


பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்களின் 69-வது பிறந்த நாளை முன்னிட்டு நலிந்தோர் மற்றும் கல்வி உதவிக்கான 3.5 லட்சம் மதிப்புள்ள காசோலை மற்றும் கணினி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்.

அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த இவர் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு வென்ற திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி மேயர், துணை மேயர், பேரூராட்சி தலைவர், துணைத்தலைவர், நகராட்சி தலைவர், துணைத் தலைவர்கள் மக்களுக்கு சிறப்பாக சேவையாற்றுவர் என்று உறுதியளித்தார்.

தொடர்ந்து பேசிய இவர், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் எவ்வித கவலையும் இன்றி மனமகிழ்வுடன் பயமின்றி படித்து தேர்வு எழுத வேண்டும். மன நிறைவுடன் தேர்வு எழுதி தங்களது குறிக்கோளை அடைய வேண்டும் என்று கூறிய அமைச்சர் கொரோனா காரணமாக பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், மார்ச் மாத இறுதிக்குள் பாடத்திட்டங்கள் நடத்தி முடிக்கப்பட்டு ஏப்ரல் மாதத்தில் திருப்புதல் தேர்வு நடைபெற்ற பிறகு பொதுத் தேர்வு நடைபெறும் என்றும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Big announcement for school students


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->