நம்பிக்கை துரோகம்...! தோழி வீட்டில் தங்க நகைகளை அபேஸ் செய்த பெண் கைது...!
Betrayal trust Woman arrested stealing gold jewelry from her friends house
சென்னை கே.கே.நகர் ஆற்காடு சாலையில் வசித்து வரும் ஜெயலட்சுமி என்பவரின் வீட்டில் வைத்திருந்த இரண்டு தங்கச் சங்கிலிகள், ஒரு தங்க டாலர் மற்றும் ஒரு மெட்டி திடீரென காணாமல் போனது.
வீட்டுக்குள் பாதுகாப்பாக வைத்திருந்த நகைகள் மாயமானதால் அதிர்ச்சி அடைந்த ஜெயலட்சுமி, உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தீவிரப்படுத்தினர்.

ஜெயலட்சுமியின் வீட்டிற்கு சமீப காலமாக வந்து சென்றவர்களின் விவரங்களை சேகரித்து, அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் என அனைவரிடமும் போலீசார் சல்லடை போட்டு விசாரித்தனர்.
இந்த விசாரணையின் போது, ஜெயலட்சுமியின் நெருங்கிய தோழியான மோனிஷா என்பவரின் நடவடிக்கைகள் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில், மாயமான நகைகளை திருடியது மோனிஷாதான் என்பதும் உறுதியாகியது.இதனைத் தொடர்ந்து போலீசார் மோனிஷாவை கைது செய்து, அவரது வசம் இருந்த அனைத்து நகைகளையும் பறிமுதல் செய்தனர்.
மேலும்,மீட்கப்பட்ட நகைகள் பின்னர் ஜெயலட்சுமியிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் கே.கே.நகர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English Summary
Betrayal trust Woman arrested stealing gold jewelry from her friends house