சுண்ணாம்பு வெள்ளையடிக்க மட்டுமல்ல!! இதற்கும் பயன்படுத்தலாம்.!! மருத்துவ பயன்கள் தெரிந்தால் ஆச்சர்யப்படுவீர்கள்!!
benefits of sunnambu
சுண்ணாம்பு பொதுவாக சுவருக்கு பூசுவதற்கும், வெற்றிலை போடவும் தான் பயன்படுத்தலாம் என அனைவரும் நினைப்பார்கள். ஆனால், அதை சுவருக்கு பயன்படுத்தினால் வீட்டில் பூச்சிகள் வராமல் இருக்கும். சுண்ணாம்பில் உள்ள கால்சியம் வெற்றிலை போடுவதன் மூலம் எலும்பின் வலிமையை அதிகரிக்கும்.
விஷப்பூச்சிகள் நம்மை கடித்து விட்டால் கடித்த இடத்தில் சுண்ணாம்பு, மஞ்சள், உப்பு மூன்றையும் நீர் சேர்த்து அரைத்து தடவினால் விஷத்தன்மை நீங்கும்.

இரவு தூங்குவதற்கு முன்னர் தேனும், சுண்ணாம்பு கலந்த கலவையை தொண்டையில் தடவினால் காலையில் தொண்டைவலி குறைந்துவிடும்
சிறிதளவு தயிருடன் சுண்ணாம்பை சேர்த்து காலையில் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை விரைவில் குணமடையும்.

உடம்பில் ஏற்படும் புண் கட்டிகள் உடைய சுண்ணாம்பு, மாவலிங்கம் பட்டை இரண்டையும் சேர்த்து நல்லெண்ணெயில் கலக்கி தடவினால் கட்டிகள் உடைந்து விடும்.
மஞ்சள் தூள், உப்பு, சுண்ணாம்பு மூன்றையும் குழைத்து நெற்றியின் மீது தடவினால் தலைவலி நீங்கும், நல்ல தூக்கமும் கிடைக்கும். தலையில் உள்ள அதிகப்படியான கெட்ட நீரூம் விலகிவிடும்