மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் பணியிடை நீக்கம்! - Seithipunal
Seithipunal


மதுபோதையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர் அருள்மூர்த்தியை அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி   பணியிடை நீக்கம் செய்தனர். 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி பஸ் நிலையத்தில் இருந்து 40 பயணிகளுடன் நேற்று விருதுநகர் மாவட்டம் சிவகாசிக்கு அரசு பஸ் புறப்பட்டது.அப்போது  பஸ்சை விருதுநகரை சேர்ந்த 50 வயதான டிரைவர் அருள்மூர்த்தி என்பவர் ஓட்டினார். 

அப்போது பொள்ளாச்சி அருகே கோமங்கலம் பகுதியில் பேருந்து சென்றபோது தாறுமாறாக சென்றது. இதனால் பயணிகள் அதிர்ச்சி அடைந்தனர். அப்போது டிரைவர் குடிபோதையில் இருந்ததால் பஸ்சை நிறுத்துமாறு பயணிகள் கண்டித்ததை தொடர்ந்து அவர் பஸ்சை நிறுத்தினார்.

மது போதை அதிகமானதால் தனது இருக்கையிலேயே டிரைவர் அருள்மூர்த்தி சாய்ந்து படுத்துவிட்டார்.  இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள் கண்டக்டர் வெங்கடேசுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் கோமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அப்போது சம்பவ இடத்துக்கு வந்த போலீசார்  மாற்று பஸ் வரவழைத்து, அந்த பஸ்சில் பயணிகளை ஏற்றி அனுப்பி வைத்தனர். மேலும் டிரைவர் அருள்மூர்த்தியை மருத்துவ  பரிசோதனை செய்ததில் அவர் குடிபோதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.இதையடுத்து அவர் மீது 

வழக்குப்பதிவு செய்தனர். இதுதொடர்பாக அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் விசாரணை நடத்தி டிரைவர் அருள்மூர்த்தியை பணியிடை நீக்கம் செய்தனர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Driver fired for operating government bus under the influence of alcohol


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->