திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம் தேதி அறிவிப்பு.!!
thiruparangundram murugan temple kumbabhishegam date announce
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் திருப்பணிகள் செய்து மகா கும்பாபிஷேகம் நடத்துவது என்று அறங்காவலர் குழு தீர்மானித்த நிலையில் ரூ.2.44 கோடியில் 20 திருப்பணிகள் செய்ய முடிவு செய்யப்பட்டது.
அதன் படி கடந்த பிப்ரவரி மாதம் 10-ந்தேதி அன்று ராஜகோபுரம் மற்றும் கோவிலுக்குள் வல்லபகணபதி கோவில், பசுபதி ஈஸ்வரர் உள்ளிட்ட உப கோவில்களுக்கு பாலாலயம் நடத்தப்பட்டது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 24-ந்தேதி முகூர்த்தக்கால் நடப்பட்டு, கோவிலின் 7 நிலை ராஜகோபுரத்தில் பழமை மாறாமல் பஞ்சவர்ணம் பூசும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
கோவிலின் பிரதானமான கருவறையில் கடந்த ஏப்ரல் மாதம் 9-ந்தேதி பாலாலயம் நடத்தப்பட்டு திருப்பணிகள் நடந்து வருகிறது. இந்த நிலையில், சிவாச்சாரியார்கள் தயார்படுத்திய கும்பாபிஷேகம் நேரம், யாகசாலை பூஜையின் விவரம் மற்றும் கும்பாபிஷேக அழைப்பிதழ் குறித்து பத்திரிகை வெளியிடப்பட்டுள்ளது.
அதில், வருகிற 23-ந்தேதி காலை 8 மணி முதல் 9 மணியளவில் முகூர்த்தக்கால் நடப்படுகிறது. இதனை தொடர்ந்து வருகிற ஜூலை மாதம் 14-ந்தேதி அதிகாலை 5.25 மணி முதல் 6.10 மணிக்குள் ராஜ கோபுரத்தில் புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறுகிறது.
இதனை முன்னிட்டு ஜூலை 10-ந்தேதி யாகசாலை பூஜை தொடங்கி 11, 12, 13 ஆகிய 3 நாட்கள் இரு வேளையிலும் யாகசாலை பூஜை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் அறங்காவலர் குழுவினர் செய்து வருகின்றனர்.
English Summary
thiruparangundram murugan temple kumbabhishegam date announce