சிக்கனால் வந்த வினை! புது மாப்பிள்ளை எடுத்த விபரீத முடிவு...! நடந்தது என்ன?
because chicken new grooms bizarre decision What happened
தஞ்சாவூர் கும்பகோணம் தாலுகா சாக்கோட்டை புதுப்பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த 29 வயதான மணிகண்டன் என்பவர், பர்னிச்சர் கடையில் தன்னுடன் வேலை செய்து வந்த 25 வயதான சுபலட்சுமி என்பவரை காதலித்து வந்தார்.இதில் கடந்த ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்னையிலுள்ள ஒரு கோவிலில் பெற்றோர் எதிர்ப்பை மீறி இவர்கள் 2 பேரும் திருமணம் செய்து கொண்டனர்.

இந்த திருமணத்துக்கு இருவீட்டிலும் எதிர்ப்பு இருந்ததால் திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் குட்டகாட்டு புதூரிலுள்ள சுபலட்சுமியின் சகோதரி மேனகா வீட்டில் வசித்து வந்தனர்.இந்நிலையில் மேனகா அவருடைய கணவர் இருவரும் ஒரு கோவில் விசேஷத்திற்காக திருச்சி சென்று விட்டனர். அப்போது வீட்டில் இருந்த மணிகண்டன் கடையில் சிக்கன் வாங்கி வந்து தனது மனைவியை சாப்பிட சொல்லியுள்ளார்.
அவர், தனது சகோதரி கோவிலுக்கு சென்று இருப்பதால் வீட்டில் சிக்கன் சாப்பிட மறுத்ததாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் வீட்டின் விட்டத்திலுள்ள இரும்பு கம்பியில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார்.இதையறிந்த அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு தனியார் அவசர ஊர்தி மூலம் கரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு பரிசோதனை செய்த மருத்துவர், மணிகண்டன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தார். இதுதொடர்பாக காவலர்கள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதில் காதல் மனைவி சிக்கன் சாப்பிட மறுத்ததால் புது மாப்பிள்ளை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் வந்தாலோ, அதில் இருந்து விடுபடுவதற்கு தமிழக சுகாதார சேவை உதவி மையம் - 104, சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம் - 044-24640050 ஆகிய எண்களை அழைக்கலாம்.
English Summary
because chicken new grooms bizarre decision What happened