அடித்துக் கொலை செய்துவிட்டு விபத்து என நாடகம்...! - புதுவையில் கள்ளக்காதலியை தீர்த்துக்கட்டிய கொடூர காதலன் ஜெயிலில் அடைப்பு...!
Beating and killing and pretending it accident cruel lover who killed fake lovers Puducherry jail
புதுச்சேரி திலகர் நகர் பகுதியைச் சேர்ந்த ராஜமாதங்கி (25), தலையில் காயங்களுடன் கடந்த 2-ஆம் தேதி கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவருடன் வந்த நபரை தனது கணவர் சரவணன் என அறிமுகப்படுத்திய ராஜமாதங்கி, முருகா திரையரங்கம் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் காயமடைந்ததாக தெரிவித்திருந்தார்.மருத்துவர்கள் மேற்கொண்ட பரிசோதனையில், அவருக்கு தலையில் காயம் இருப்பதோடு மூன்று மாத கர்ப்பிணியாகவும் இருப்பது தெரியவந்தது.

மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தப்பட்ட போதிலும், உடல்நிலை சீராக இருப்பதாக கூறி முதலுதவி சிகிச்சை மட்டும் பெற்றுக்கொண்டு வீட்டிற்கு திரும்பினார்.ஆனால் வீட்டிற்கு சென்ற சில மணி நேரங்களிலேயே அவர் மயங்கி விழுந்ததால், உறவினர்கள் மீண்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அப்போது உடலின் பல்வேறு பகுதிகளிலும் காயங்கள் இருப்பதை மருத்துவர்கள் கண்டறிந்தனர். சம்பவத்தில் சந்தேகம் எழுந்ததால் காவலர்கள் தரப்புக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ராஜமாதங்கி உயிரிழந்ததைத் தொடர்ந்து, காவலர்கள் கண்காணிப்பு காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர்.
விசாரணையில், அவர் குறிப்பிட்ட இடத்தில் எந்த சாலை விபத்தும் நிகழவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்கு அழைத்து வந்த நபர் யார் என்பது குறித்து தீவிரமாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அதில், விழுப்புரம் மாவட்டம் சின்னகோட்டகுப்பத்தைச் சேர்ந்த சுரேந்திரன் (29) என்பவர் ராஜமாதங்கியை மருத்துவமனைக்கு அழைத்து வந்தது வெளிச்சத்துக்கு வந்தது. அவரை பிடித்து காவலர்கள் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகின.பள்ளிப் பருவம் முதல் சுரேந்திரனும் ராஜமாதங்கியும் காதலித்து வந்ததாகவும், குடும்பத்தினரின் எதிர்ப்பால் ராஜமாதங்கிக்கு சரவணனுடன் திருமணம் நடைபெற்றதாகவும் தெரியவந்தது.
பின்னர் சுரேந்திரன் வெளிநாட்டில் பணிபுரிந்து வந்த நிலையில், சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பியதும் இருவருக்கும் மீண்டும் தொடர்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து அடிக்கடி சந்தித்து வந்த இருவருக்கும் இடையே நெருக்கம் அதிகரித்ததாகவும், இதை அறிந்த கணவர் சரவணன் எதிர்ப்பு தெரிவித்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது. பின்னர் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் ராஜமாதங்கி புதுச்சேரியில் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது.
சம்பவத்தன்று சுரேந்திரனை தொடர்புகொள்ள முடியாத ஆத்திரத்தில் அவரது வீட்டிற்கு சென்ற ராஜமாதங்கி தகராறில் ஈடுபட்டதாகவும், அப்போது ஏற்பட்ட வாக்குவாதம் முற்றியதில் சுரேந்திரன் தாக்கியதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதலின் போது தப்பிச் செல்ல முயன்ற ராஜமாதங்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயமடைந்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
பின்னர் சம்பவத்தை மறைக்கும் நோக்கில், சுரேந்திரனை தனது கணவர் எனக் கூறி, விபத்தில் காயமடைந்ததாக மருத்துவமனையில் பதிவு செய்ய முயற்சித்ததும் அம்பலமானது.இதனைத் தொடர்ந்து வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டு, சுரேந்திரன் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான அனைத்து ஆதாரங்களையும் காவலர்கள் சேகரித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பரபரப்பான வழக்கின் முழு உண்மைகள் விரைவில் வெளிச்சத்துக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
Beating and killing and pretending it accident cruel lover who killed fake lovers Puducherry jail