புதிய கட்சியை அறிவித்த கையோடு மாஸ் காட்டும் அண்ணாமலை...! இயக்கத்தில் இணைந்தோர் எண்ணிக்கை 5 லட்சத்தை தாண்டியது...! - மிரளும் அரசியல் களம்...!
Annamalai shows mass hand announces new party number people joining movement exceeded 5 lakhs
பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை அளித்திருந்த ராஜினாமா கடிதத்தை, கட்சியின் தேசியத் தலைவர் நிதின் நபின் ஏற்றுக்கொண்டதாக பொதுச்செயலாளர் அர்ஜூன் சிங் அறிவித்துள்ளார். மேலும், பாஜக அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகும் அவரது முடிவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சூழலில், பாஜகவில் இருந்து விலகிய அண்ணாமலை சமூக வலைத்தளத்தின் வாயிலாக நேரலையில் தோன்றி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். அதில், புதிய அரசியல் இயக்கத்தை உருவாக்க உள்ளதாகவும், அந்த இயக்கம் வரவிருக்கும் பொதுத்தேர்தலில் களமிறங்கும் என்றும் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, தனது புதிய அரசியல் பயணத்தின் தொடக்க அறிவிப்பை வெளியிட்ட அண்ணாமலை, பொதுமக்கள் இணைவதற்கான இணையதள முகவரியையும் அறிமுகப்படுத்தினார். அந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே ஆயிரக்கணக்கானோர் ஆர்வத்துடன் உறுப்பினர் சேர்க்கையில் பங்கேற்றனர்.
நண்பகல் 1 மணி நிலவரப்படி, ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானோர் தங்களை இயக்கத்துடன் இணைத்துக் கொண்டிருந்தனர்.இந்நிலையில், மாலை 4 மணி வரையிலான கணக்கெடுப்பில், இணையவழி உறுப்பினர் சேர்க்கை 5 லட்சத்தை (5,07,811) கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.
ஒவ்வொரு நிமிடமும் நூற்றுக்கணக்கானோர் தொடர்ந்து இணைந்து வருவதால் உறுப்பினர் எண்ணிக்கை வேகமாக உயர்ந்து வருகிறது. புதிதாக இணைந்தவர்களில் பெரும்பாலானோர் பாஜக பின்னணியைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையதளத்தில் தங்களது பெயர் மற்றும் கைபேசி எண்ணை பதிவு செய்து ஏராளமானோர் உறுப்பினர்களாக இணைந்து வருகின்றனர். அண்ணாமலையின் புதிய அரசியல் இயக்க அறிவிப்பு வெளியாகியதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அவரது ஆதரவாளர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் உற்சாகக் கொண்டாட்டங்களில் ஈடுபட்டனர்.
English Summary
Annamalai shows mass hand announces new party number people joining movement exceeded 5 lakhs