ஒகேனக்கல்லில் குளிக்க அனுமதி...! நீர்வரத்து குறைவினால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி...!!
Bathing allowed Okenakkal Tourists happy due reduced water flow
தென்மேற்கு பருவமழை காரணமாக கேரளா மற்றும் கர்நாடக அணைகளில் வெளியேற்றப்படும் நீர் அளவுகள் மாறுபடும் நிலையில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை அளவு குறைந்து வருகிறது.

இதனால் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லில் வினாடிக்கு நீர்வரத்து நேற்று மாலை 16,000 கனஅடி இருந்தது. இன்று காலை 8 மணிக்கு அது 12,000 கனஅடி வரை குறைந்தது.
இதனால், ஒகேனக்கல்லின் சினிபால்ஸ், மெயின் அருவி மற்றும் ஐந்தருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியுள்ளது. இதனை பின்பற்றி மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள், தமிழக-கர்நாடக எல்லையிலுள்ள காவிரி ஆற்றின் நிலவரத்தை தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
மேலும், நீர்வரத்து குறைவினாலும், இன்று குளிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், பரிசல் இயக்கத்துக்கும் அனுமதி கிடைத்ததால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
English Summary
Bathing allowed Okenakkal Tourists happy due reduced water flow