"திராவிட நாயகன்" முதல்வர் ஸ்டாலின்.. சென்னையில் பறக்கும் வெள்ளை பலூன்..!! - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் 70 வது பிறந்தநாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதற்காக பல்வேறு ஏற்பாடுகளை திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முன்னெடுத்து வருகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் தனது பிறந்தநாளை ஆடம்பரம் என்று கொண்டாட வேண்டாம் என்றும், பேனர் வைப்பது, போஸ்டர் அடிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று அறிவுறுத்தி இருந்தார்.

ஆனால் முதல்வரின் பேச்சை மதிக்காத திராவிட முன்னேற்றக் கழகத்தின் உடன்பிறப்புகள் முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு 70 அடி உயரத்தில் "திராவிட நாயகன்" என்று பொறிக்கப்பட்ட பலூனை அன்பகம், பெரியார் திடல் உள்ளிட்ட சென்னையின் பல்வேறு இடங்களில் பறக்க விட ஏற்பாடு செய்துள்ளனர். 

திமுக தலைவரும் முதலமைச்சருமான மு.க ஸ்டாலின் நாளை தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளதால் தமிழகம் முழுவதும் உள்ள கழக உடன்பிறப்புகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகவே "திராவிட நாயகன்" பலூன் பறக்க விடப்படுகிறது. முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளுக்காக பறக்க விடப்படும் பலூன் வெள்ளை நிறத்தில் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Balloon emblazoned with Dravidian hero for MKStalin birthday


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->