மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு; 22 காளைகளை அடக்கிய காரை பரிசாக வென்ற, வலையாங்குளம் பாலமுருகன்..!
Balamurugan who tamed 22 bulls at the Avaniyapuram Jallikattu was awarded a car as a prize
தமிழர் பண்டிகையான பொங்களை முன்னிட்டு, தமிழர்களின் வீரத்தை பறைசாற்றும் மாடுகளை அடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். மதுரை மண்ணில், அவனியாபுரம், அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றது.
அதன்படி, பொங்கல் தினமான இன்று அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெற்றது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள் மற்றும் காளைகள் அடக்கும் வீரர்கள் கலந்து கொண்டனர். இந்த காலை அடக்கும் போட்டியில், வலையாங்குளத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவர், 22 காளைகளை அடக்கி அசத்தியுள்ளார். இவருக்கு கார் பரிசாக கொடுக்கப்பட்டது.

அடுத்ததாக, 17 காளைகள் அடக்கிய அவனியாபுரத்தை சேர்ந்த கார்த்திக்கிற்கு 02-வது பரிசாக பைக் வழங்கப்பட்டது. 16 காளைகள் அடக்கிய ரஞ்சித் என்பவருக்கு 03-வது பரிசு வழங்கப்பட்டது. துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சார்பில் டிராக்டர் வழங்கப்பட்டது.
அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 12 சுற்றுகளாக நடத்தப்பட்ட போட்டியில் 1000 -க்கும் மேற்பட்ட காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. 600 -க்கும் மேற்பட்ட வீரர்கள் களத்தில் மாடுகளை பிடிக்க களம் இறங்கினர். இதேவேளை, நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறவுள்ளதோடு, நாளை மறுதினம் பாலமேடு ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளது.
English Summary
Balamurugan who tamed 22 bulls at the Avaniyapuram Jallikattu was awarded a car as a prize