வேலூர் || பள்ளி மாணவிக்கு வளைகாப்பு நடத்திய சக மாணவிகள் - வகுப்பாசிரியை பணியிடைநீக்கம்.! - Seithipunal
Seithipunal


வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி பகுதியில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி ஒன்றில் பயிலும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிகள் சிலர் சக மாணவிக்கு பத்திரிகை அடித்து வளைகாப்பு நடத்தி அதனை வீடியோவாக பதிவு செய்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளனர். 

அந்த வீடியோவில் பள்ளியின் மேல் தளத்தில் வளைகாப்பு நடத்த தேவையான பொருட்களுடன் மாணவிகள் சிலர் வந்தனர். அதன்பின்னர் ஒரு மாணவியை அமர வைத்து பேப்பர் மாலை அணிவித்து, சாப்பாடு வகைகள் வைத்து, வளைகாப்பு நடத்துவது போன்று உள்ளது. 

தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தினார். 

இதைத் தொடர்ந்து, பன்னிரெண்டாம் வகுப்பு மாணவிக்கு, சக மாணவிகள் வளைகாப்பு நடத்தி ரீல்ஸ் பதிவிட்ட விவகாரத்தில் வகுப்பு ஆசிரியை சாமுண்டீஸ்வரி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மேலும் தலைமை ஆசிரியரிடம் சம்பவம் குறித்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

baby shower to school student in kaptadi


கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?



Advertisement

கருத்துக் கணிப்பு

நடிகர் விஜயின் அரசியல் வருகை யாருக்கு பாதிப்பு?




Seithipunal
--> -->