குழந்தையின் உயிரை பறித்த தண்ணீர் தொட்டி., புதுகோட்டையில் நடந்த சோகம்..!! - Seithipunal
Seithipunal


தண்ணீர் தொட்டியில் விழுந்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம், அண்டக்குளத்தை  பகுதியில் வசித்து வருபவர் குமாரசாமி. இவருக்கு திருமணமாகி சுசீலா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதிக்கு குணவதி என்ற  வயது மகள் இருக்கிறாள்.

சம்பவதன்று, குழந்தை வீட்டின் பின்புறம் விளையாடி கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்துள்ளது.

இதனை கண்டு பதறி போன பெற்றோர் குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு குழந்தைய பரிசோதித்த மருத்துவர்கள் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் குழந்தையின் உடலை பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby killed after falling into water tank


கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,Advertisement

கருத்துக் கணிப்பு

ஜெய் பீம் குறித்து.,
Seithipunal