ஜல்லிக்கட்டு வழக்கில், அதிரடியாக இறுதி தீர்ப்பை வழங்கிய உயர்நீதிமன்றம்! - Seithipunal
Seithipunal


தமிழர்களின்  வீரத்தை பறைசாற்றும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்குகள் இன்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் விசாரணைக்கு வந்தது. 

ஜல்லிக்கட்டு போட்டி என்றாலே, நினைவுக்கு வருவது மதுரை நகரம் தான். மதுரையின் சில முக்கிய இடங்களில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிக்கான தேதி அறிவிக்கப்பட்டுள்ளது, தமிழ்நாட்டு மக்களிடமும், ஜல்லிக்கட்டு ரசிகர்கள் வீரர்களிடமும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

ஜனவரியில் நடைபெற உள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுதும் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த ஏற்பாடுகள் நடைப்பெற்று வருகின்றன. இதற்காக, ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் மாடுகளை அதன் உரிமையாளர்கள் தயார் செய்து வருகின்றனர். 

காளைகளுக்கு, மண் குவியலில் குத்துதல், ஓட்டம், நீச்சல் பயிற்சி, மாதிரி வாடி வாசல் அமைத்து திறந்து விடுதல் போன்ற பயிற்சிகளையும் உரிமையாளர்கள் கொடுத்து வருகின்றனர். மதுரை மட்டுமின்றி, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் போட்டிகள் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அனுமதி வழங்கி உள்ளது. ஜன. 15-ல் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு நடத்த தடை இல்லை என்றும் அனுமதி கோரி தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்ற மதுரைக்கிளை இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Avaniapuram Jallikattu case in High Court


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal