பயணிகள் கவனத்திற்கு..17 மின்சார ரெயில்கள் ரத்து! - Seithipunal
Seithipunal


சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி இடையே பராமரிப்பு பணி மேற்கொள்ள இருப்பதால் 17 மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-சென்னை சென்டிரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை-கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே நாளைமற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளதன்காரணமாக, சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதன்படி சென்டிரலில் இருந்து காலை 10.30, 11.35 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள்,  காலை 10.15, மதியம் 12.10, 1.05 மணிக்கு சூலூர்பேட்டை செல்லும் மின்சார ரெயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கடற்கரையில் இருந்து காலை 9.40 மதியம் 12.40 ஆகிய நேரங்களில் புறப்பட்டு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில்கள்,சென்டிரலில் இருந்து இரவு 11.40 மணிக்கு ஆவடி செல்லும் மின்சார ரெயில், 
 கும்மிடிப்பூண்டியில் இருந்து மதியம் 1, 2.30 மாலை 3.15 ஆகிய நேரங்களில் சென்டிரல் செல்லும் மின்சார ரெயில்கள் சூலூர்பேட்டையில் இருந்து மதியம் 1.15, மாலை 3.10, இரவு 9 மணிக்கு சென்டிரல் செல்லும் மின்சார ரெயில்கள்.சூலூர்பேட்டையில் இருந்து மாலை 3.50 மணிக்கு நெல்லூர் செல்லும் பயணிகள் ரெயிலும், மறுமார்க்கமாக நெல்லூரில் இருந்து மாலை 6.45 மணிக்கு சூலூர்பேட்டை வரும் பயணிகள் ரெயிலும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது என  தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

அதேபோல செங்கல்பட்டில் இருந்து நாளை மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 9.55 மணிக்கு கும்மிடிப்பூண்டி செல்லும் மின்சார ரெயில் கடற்கரையில் நிறுத்தப்படும், கும்மிடிப்பூண்டியிலிருந்து மாலை 3 மணிக்கு தாம்பரம் வரும் மின்சார ரெயில் கடற்கரையில் இருந்து புறப்படும் இந்த ரயில்கள்  பகுதி நேர ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

மேலும் இதன்காரணமாக  இந்த 2 தேதிகளிலும் சென்டிரல்-பொன்னேரிக்கும், சென்டிரல் -மீஞ்சூருக்கும், கடற்கரை-பொன்னேரிக்கும்,  பொன்னேரி-சென்டிரலுக்கும், மீஞ்சூர்-சென்டிரலுக்கும், பொன்னேரி-சென்டிரலுக்கும் சிறப்பு மின்சார ரெயில்கள் இயக்கப்படுகிறது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Attention passengers17 electric trains have been canceled


கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!



Advertisement

கருத்துக் கணிப்பு

அண்ணா பல்கலைக்கழக மாணவி வழக்கின் தீர்ப்புக்கு பின்பும், யார் அந்த சார்? என்ற எதிர்க்கட்சிகளின் கேள்வி!




Seithipunal
--> -->