பயணிகள் கவனத்திற்கு...!மாற்றுப் பாதையில் சேலம் வழி செல்லும் ரெயில்கள் இயக்கம்...! - சேலம் கோட்ட ரெயில்வே
Attention passengers Trains passing through Salem will operate on a diversionary route Salem Division Railway
சேலம் கோட்ட ரெயில்வே அதிகாரிகள்,'ஈரோடு - காவிரி பாலம் இடையே தற்போதுள்ள இரும்பு பாலத்துக்கு பதிலாக, கான்கிரீட் பாலம் அமைப்பதற்கான பணி நடைபெறுவதால், சில ரெயில்கள் இயக்க வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது' என்று தெரிவித்துள்ளனர்.

சேலம் ரெயில்வே கோட்டம்:
இது குறித்து சேலம் ரெயில்வே கோட்டம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,"ஈரோடு காவிரி பாலம் அருகே பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதில் ஏற்கனவே உள்ள இரும்பு பாலத்தை அகற்றி உயர்தர காங்கிரீட் பாலம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கான பணிகள் நடைபெறுவதால் ஈரோடு, சேலம் வழியாக இயங்கும் ஒரு சில ரெயில்கள் வழித்தடத்தில் மாற்றம் செய்து அறிவிக்கப்பட்டுள்ளது.மேலும், கோவையில் இருந்து தினமும் இயக்கப்படும் லோக் மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரெயில் கோவையில் இருந்து 8.50 மணிக்கு புறப்பட்டு வழக்கமாக ஈரோடு சேலம் வழியாக செல்லும். தற்போது காவிரி பாலம் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், நாளை (14-ந் தேதி ) முதல் ஈரோடு, கரூர், சேலம் வழித்தடத்தில் செல்லும்.
கூடுதலாக இந்த ரெயில் கரூரில் நின்று செல்லும் .இதே போல எர்ணாகுளம்-தாத்தாங்கர் எக்ஸ்பிரஸ் ரெயில் ஈரோடு, கரூர் , சேலம் வழியாக செல்லும். கரூரில் இந்த ரெயில் நின்று செல்லும். அதேபோல ஆலப்புழா தன் பாத் எக்ஸ்பிரஸ் ரெயில், எர்ணாகுளம் கே. எஸ் .ஆர் .பெங்களூரு எக்ஸ்பிரஸ் ஆகிய ரெயில்கள் ஈரோடு சேலம் வழியாக செல்லாமல் ஈரோடு கரூர், சேலம் வழியாக செல்லும்" என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இதை ரெயில் பயணிகள் முன்னெச்சரிக்கையாக பார்த்து செல்லவேண்டும் என்றுக் கேட்டுக்கொள்ளப்படுகிறது.
English Summary
Attention passengers Trains passing through Salem will operate on a diversionary route Salem Division Railway