ஒப்பனையில்லா அத்திவரதரின் முகம்., இப்படியா இருக்கும்.? வெளியான அரிய புகைப்படம்.!  - Seithipunal
Seithipunal


பல பெயர்களில், பல ரூபங்களில், பல கோவில்களில் அர்ச்சாவதாரமாக, அருள்வெள்ளம் பெருக்குகிறார் திருமால். யார் வந்து கேட்டாலும் வரமளித்து அருள்புரிபவர். இப்படி, கேட்டவர் அனைவருக்கும் வரமளித்து மகிழ்வித்ததாலேயே வரதராஜன் என்று போற்றப்பட்ட வரதராஜப் பெருமாளை, காஞ்சிபுரத்து திவ்ய தேசக் கோவில்களில் முதலாவதாக தரிசிக்கலாம்.

athivarathar, seithipunal

இக்கோவிலில் அனந்தஸரஸ் என்ற தீர்த்தத்தினுள் அத்திவரதர், அனந்த சயனராக ஆனந்த யோகம் கொண்டிருக்கிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இந்த அத்திவரதர் அந்தத் திருக்குளத்தை விட்டு வெளியே வந்து தரிசனம் தருகிறார். இந்த கணக்குப்படி அடுத்த தரிசனம் இந்த ஆண்டு நமக்கு கிடைத்துள்ளது. அப்போது 48 நாட்கள் மட்டுமே வெளியே வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். பிறகு மறுபடியும் நீருக்குள் சயனம் கொள்ள ஆரம்பித்துவிடுவார்.

கடந்த 40 ஆண்டுகளாக அனந்தசரஸ் குளத்திற்குள் துயில் கொண்டிருந்த ஆதி அத்திவரதர், கடந்த மாதம் 27ஆம் தேதி இரவு பரிகார பூஜைகளுடன் வெளியே எடுக்கப்பட்டார்.

athivarathar, seithipunal

அத்திவரதர் தரிசனம் :

40 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டும் வெளியே எழுந்தருளும் அத்திவரதர், 1979ஆம் ஆண்டு ஜூலை 2ஆம் தேதி எழுந்தருளினார். அதன்பின் அத்திவரதர் சிலை மீண்டும் குளத்தில் வைக்கப்பட்டது.

40 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலித்து கொண்டுள்ளார். இந்த விழா ஜூலை 1ஆம் தேதி தொடங்கி ஆகஸ்டு 17ஆம் தேதி வரை 48 நாட்கள் நடைபெறுகிறது.

40 ஆண்டுகளுக்கு பிறகு வெளியே வந்த அத்திவரதரை தரிசித்த பக்தர்கள் வரதா...! வரதா...! கோவிந்தா...! கோவிந்தா...! என முழக்கமிட்டு தரிசனம் செய்தனர்.

அத்திவரதரை பொதுமக்கள் ஜூலை 1ஆம் தேதி முதல் 48 நாட்கள் வரை அனுதினமும் தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்திவரதரை தரிசிக்க 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வரை வரலாம் என எதிர்பார்க்கப்படுவதால் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தரிசனம் செய்ய ஒரு பொது வழியும், ஒரு சிறப்பு தரிசன வழியும் அமைக்கப்பட்டுள்ளன.

athivarathar, without make up,

இந்நிலையில், அத்திவரதர், குளத்தில் இருந்து எடுத்து சுத்தம் செய்தபின், அலங்காரங்களுக்கு முன்பு எடுக்க பட்ட ஒரு புகைப்படம் தற்போது வெளியாகி வருகின்றது. அத்திமரத்தின் சுழிகளையும், வேலைப்பாடுகளையும் அந்த புகைப்படம் தெளிவாக காட்டுகிறது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

athivarathar old close up photo without make up


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் மாவட்ட வாரியாக திடீரென கொரோனா அதிகரித்திருப்பது..
Seithipunal