திருமணம் முடிந்து 3 மாதம்.. மதுப்பழக்கத்தால் அரங்கேறிய சோகம்.. இரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த மனைவி.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் வடுகர்பாளையம் பகுதியை சார்ந்தவர் தமிழரசன் (வயது 23). இவர் பால் வியாபாரியாக இருந்து வருகிறார். இவருக்கும், மங்களம் கிராமத்தை சார்ந்த பிரியா (வயது 18) என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்று முடிந்துள்ளது. 

இதனையடுத்து புதுமண தம்பதிகள் தனிக்குடித்தனம் நடத்தி வந்த நிலையில், மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்த தமிழரசன் தினமும் மது அருந்திவிட்டு மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும், நேற்றும் வழக்கம்போல மதுபோதையில் வீட்டில் தகராறு செய்துள்ளான். 

இதனால் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், தமிழரசன் பிரியாவை அடித்துள்ளான். இதனால் சம்பவ இடத்தில் மயங்கி விழுந்த பிரியா, பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். 

தகவலை அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், பிரியாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், தமிழரசனை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Jayankondam Wife Murder By Husband Police Arrest Husband


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal