அரசுப்பேருந்தை 1 கிமீ தூரம் இயக்கி, மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்..! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஆனந்தவாடி கிராமம் வழியாக ஜெயங்கொண்டம் வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று உள்ளூர் மக்கள் தொடர் கோரிக்கைகளை அரசுக்கு வைத்து வந்தனர். 

இதன் அடிப்படையில், கோரிக்கைகளை ஏற்றுக்கொண்ட அரசு கூடுதல் பேருந்துகளை இயக்க அனுமதி வழங்கவே, ஆனந்தவாடி கிராமத்தில் இருந்து இரும்புலியூர் உடையார்பாளையம் வழித்தடத்தில் ஜெயங்கொண்டம் செல்லும் வகையில் கூடுதல் பேருந்து சேவை இன்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. 

இந்த நிகழ்ச்சியினை, அரியலூர் மாவட்டத்தில் உள்ள ஜெயங்கொண்டம் - ஆனந்தவாடி பேருந்து சேவையை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் நேரில் வந்து தொடங்கி வைத்தார். இதனால் உள்ளூர் மக்கள் பெரும் இன்பத்திற்கு உள்ளாகினர். 

ஆனால், மக்களுக்கு மேலும் இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தும் பொருட்டு, உடையார்பாளையம் - ஆனந்தவாடி வழித்தடத்தில் சுமார் ஒரு கிமீ தூரம் பேருந்தை அமைச்சர் எஸ்.எஸ் சிவசங்கர் இயக்கினார். இதனால் மக்கள் பெரும் இன்ப அதிர்ச்சிக்கு உள்ளாகி தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Jayankondam New Bus Service Minister SS Sivasankar Drive Govt Bus


கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

பெட்ரோல், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர திமுக அரசு குரல் கொடுக்க வாய்ப்பு?
Seithipunal