சோழர்களின் வாழ்வியலை மீட்கும் முயற்சி.. துவங்கிய அகழாய்வு பணிகள்.. கொண்டாட்டத்தில் அரியலூர் மக்கள்.!! - Seithipunal
Seithipunal


அரியலூர் மாவட்டத்திலுள்ள ஜெயங்கொண்டம் கங்கைகொண்டசோழபுரம், சோழப் பேரரசின் ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது. சோழ மன்னன் ராஜேந்திரனின் ஆட்சிக்காலத்தில் கங்கையில் இருந்த வரையும், கீழக நாடுகளான இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட நாடுகளும் சோழனின் கட்டுப்பாட்டில் இருந்தது. 

இந்த நாடுகளின் தலைநகராக இருந்த கங்கை கொண்ட சோழபுரத்திற்கு பல வரலாறுகள் இருக்கிறது. கங்கைகொண்ட சோழபுரத்தில் இருந்த மாடமாளிகைகள் அனைத்தும் அழிந்துவிட்ட நிலையில், ராஜேந்திரன் படையெடுப்பின் வெற்றியை பறைசாற்றும் விதமாக கங்கைகொண்ட சோழீஸ்வரர் திருக்கோயில் மற்றும் சோழகங்கம் உருவாக்கப்பட்டது. 

சோழ மன்னர்கள் வாழ்ந்த அரண்மனை மற்றும் மாளிகைகள் இருந்த இடங்கள் அழிந்து போய்விட்ட நிலையில், மாளிகை மேடு என்று அப்பகுதியின் பெயர் அழைக்கப்பட்டு வருகிறது. கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் அகழ்வாய்வு காரணமாக பல புதிய தகவல்கள் வெளியாகிவரும் நிலையில், இப்போது கங்கைகொண்ட சோழபுரம் பகுதியிலும் அகழ்வாய்வு மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். 

இந்த நிலையில், மாளிகை மேடு பகுதியில் அகழாய்வு செய்ய சாத்தியக்கூறுகள் இருப்பதாக தொல்லியல் துறை ஆணையர் உதயசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், இவர் தலைமையிலான ஆய்வாளர்களும் மாளிகை மேடு பகுதியில் ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் மூலமாக சோழர் காலத்தில் தமிழர்கள் கொண்டிருந்த பண்பாட்டு கலாச்சாரப் பெருமை உலகுக்கு தெரியவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ariyalur Gangaikonda Cholapuram Excavation works


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal