ஆன்லைனில் மது வாங்க மக்களுக்குத் தயக்கமா...? டாஸ்மாக் விற்பனையில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்...! - Seithipunal
Seithipunal


தமிழ்நாடு மாநில வாணிபக் கழகத்தின் மதுபானக் கடைகளில் நீண்ட நேரம் வரிசையில் காத்திருப்பதைத் தவிர்க்கும் நோக்கில், புதிய ஆன்லைன் முன்பதிவு வசதி கடந்த 7-ந்தேதி முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் வீடுகளுக்கே மதுபாட்டில்கள் கொண்டு வந்து வழங்கப்படுவதில்லை.

மாறாக, இணையதளம் வழியாக தங்களுக்கு தேவையான மதுபாட்டில்களை முன்பதிவு செய்து, பின்னர் சம்பந்தப்பட்ட கடைகளில் நேரடியாக பெற்றுக்கொள்ளும் வகையில் இந்த வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.புதிய நடைமுறையால் மதுபானக் கடைகளில் காத்திருக்கும் நேரம் குறையும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தொடக்கத்திலேயே சில நடைமுறை சிக்கல்கள் எழுந்துள்ளதாக கடை ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக, முன்பதிவு தொடர்பான குழப்பங்கள் காரணமாக சில இடங்களில் மதுப்பிரியர்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.ஆன்லைன் மதுவிற்பனை தொடங்கிய முதல் நாளில் ரூ.11.62 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மட்டுமே முன்பதிவு செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டன.

அதன்பின்னர் இரண்டாவது நாளில் சுமார் 3 ஆயிரம் முன்பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், ரூ.9 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் மட்டுமே ஆன்லைன் முறையில் விற்பனையாகியுள்ளன.இதற்கு மாறாக, அதே நாளில் மாநிலம் முழுவதும் உள்ள மதுபானக் கடைகளின் வழக்கமான மொத்த விற்பனை ரூ.162 கோடியே 37 லட்சமாக இருந்துள்ளது.

இதனுடன் ஒப்பிடும்போது ஆன்லைன் வாயிலான விற்பனை ஒரு சதவீதத்தைக்கூட எட்டவில்லை.புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டு தொடக்க நாட்களே ஆனாலும், நேரடியாக கடைகளுக்குச் சென்று மதுபானங்களை வாங்குவதையே பெரும்பாலானோர் விரும்புகின்றனரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும், ஆன்லைன் முன்பதிவு நடைமுறை குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததும், தொடக்ககட்ட தொழில்நுட்ப மற்றும் செயல்முறை சிக்கல்களும் குறைந்த அளவிலான முன்பதிவுக்கு காரணமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Are people hesitant buy alcohol online Shocking information revealed TASMAC sales


கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...



Advertisement

கருத்துக் கணிப்பு

தனியாரிடம் மது விற்பனையை கொடுப்பது...




Seithipunal
--> -->