அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்கள் நியமனம்- அரசு அறிவிப்பு - Seithipunal
Seithipunal


2023- 24ஆம் கல்வியாண்டில் அரசு கலை, அறிவியல் கல்லூரிகளுக்கு 5699 கவுரவ விரிவுரையாளர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. இவர்களுக்கு ஊதியம் வழங்க, ரூ.125 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம், கோவை பாரதியார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்கலைக்கழகங்களில் உறுப்புக் கல்லூரிகளாக இருந்து, அரசுக் கல்லூரிகளாக 41 கல்லூரிகள் தரம் உயர்த்தப்பட்டன.

இந்த 41 கல்லூரிகள் மற்றும் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களில் இயங்கி வரும் 108 அனைத்து அரசு கல்லூரிகளையும் சேர்த்து மொத்தம் 149 கல்லூரிகளில் 5500 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக அரசு முதன்மைச் செயலாளர் கார்த்திகேயன் அறிவித்துள்ளார்.  

ஒரு கவுரவ விரிவுரையாளருக்கு மாதம்‌ ஒன்றிற்கு ஊதியமாக ரூ.20,000 வீதம்‌ 11 மாதங்களுக்கு ஏப்ரல்‌ 2023 மற்றும்‌ ஜூன்‌ 2023 முதல்‌ மார்ச்‌ 2024 வரை ரூ.125,37,80,000 நிதி ஒப்பளிப்பு‌ செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.

மேலும் தொகுப்பூதிய அடிப்படையில்‌ 11 மாதம்‌ வீதம்‌ பணிபுரியும்‌ கவுரவ விரிவுரையாளர்கள்‌ தங்களது பணி காலத்தில்‌ இடைநிற்றல்‌ ஏற்பட்டாலோ, இறப்பு அல்லது இதர காரணங்களின்‌ அடிப்படையில்‌ காலிப்பணியிடம்‌ உருவாகும்‌ பட்சத்தில்‌ அந்த பணியிடத்தினை அரசின்‌ அனுமதி பெற்ற பின்னர் தான்  நிரப்ப வேண்டும்‌ எனவும் ஆசிரியர்‌ - மாணாக்கர்கள்‌ விகிதாச்சாரம்‌ 1 : 30 என்ற விகிதாச்‌ சாரத்தின்படி அமைந்துள்ளதை உறுதி செய்ய வேண்டும்‌ எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Appointment of 5699 Honorary Lecturers in Government Arts and Science Colleges Government Notification


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->