கடலூர் அருகே கடலுக்குள் 04 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கோரி விண்ணப்பம்..!
Application submitted seeking permission to set up four hydrocarbon wells in the sea near Cuddalore
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டையில் இருந்து 18 கி.மீ தொலைவில் கடலுக்குள் 04 ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க கடலோர ஒழுங்குமுறை ஆணையத்தின் அனுமதி கோரி இந்துஸ்தான் ஆயில் நிறுவனம் விண்ணப்பித்துள்ளது.
இதற்காக ரூ.425 கோடி செலவில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்த இந்துஸ்தான் ஆயில் திட்டமிட்டுள்ளது.
ஹைட்ரோ கார்பன் திட்டத்தால் கடல்வளம் பாதிக்கப்படும் என சூழலியல் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. சூழலியல் அமைப்புகளின் எதிர்ப்பு உள்ள நிலையில் ஹைட்ரோ கார்பன் கிணறுகள் அமைக்க அனுமதி கேட்டு விண்ணப்பித்துள்ளது.
அத்துடன், 2025-இல் தமிழ் நாடு அரசின் நிலைப்பாடு கடற்பகுதியில் அமைக்கப்படும் ஹைட்ரோகார்பன் கிணறுகளுக்கும் எதிரானதாகவே இருந்தது. அதே நிலைப்பாட்டைத் த.வெ.க. அரசும் எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
English Summary
Application submitted seeking permission to set up four hydrocarbon wells in the sea near Cuddalore