அண்ணாமலையை தொடரும் சோதனை... மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட நடைபயணம்!  - Seithipunal
Seithipunal


தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, பிரதமர் நரேந்திர மோடியின் 10 ஆண்டுகால ஆட்சியின் சாதனைகளை விளக்கி 'என் மண் என் மக்கள்' என்ற தலைப்பில் தமிழக முழுவதும் உள்ள சட்டமன்ற தொகுதி வாரியாக நடைபயணம் மேற்கொள்கிறார். 

வருகின்ற 28ஆம் தேதி திருப்பூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொள்ள இருந்த நிலையில் இதற்கான ஏற்பாடுகளை திருப்பூர் மாநகர பா.ஜ.கவினர் செய்து வந்தனர். 

ஆனால், அண்ணாமலையின் நடைப்பயணம் தேதி திடீரென மாற்றப்பட்டது. முன்னதாக அண்ணாமலை நடைபயணத்தை சென்னையில் நிறைவு செய்து பிரம்மாண்ட பொதுக்குழு கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

பின்னர் இறுதி நடைப்பயணம் மற்றும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தை திருப்பூரில் நடத்தவும் அந்த கூட்டத்தில் 10 லட்சம் பேரை கலந்துகொள்ள செய்யவும் திட்டமிடப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இதனால் வருகின்ற 28ஆம் தேதி திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக திருப்பூர் மாநகர பா.ஜ.க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். 

திருப்பூரில் நடைபெற இருந்த நடைபயணம், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20ஆம் தேதி மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் உயிரிழந்த அதன் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது. பிறகு இரண்டாவது முறையாக திருப்பூரில் அண்ணாமலை நடைபயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Annamalai trek scheduled tirupur again postponed


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->