ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் கொட்டும் மழையில் தீமிதி திருவிழா..பக்தர் ஒருவர் தீயில் தவறி விழுந்ததால் பரபரப்பு!
An incident occurred during the Thimithi festival at Sri Dharmaraja Temple in the pouring rainwhen a devotee fell into the firecausing a commotion
அருள்மிகு திரௌபதி அம்பாள் சமேத ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் கொட்டும் மழையில் தீமிதி திருவிழாநடைபெற்றது. மழையில் நனைந்தபடியே பக்தர்கள் தீ மிதித்த போது பக்தர் ஒருவர் தீயில் தவறி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரும்பாக்கம் பகுதியில், நேதாஜி சாலையில் அமைந்துள்ள அருள்மிகு திரௌபதி அம்பாள் சமேத ஸ்ரீ தர்மராஜா திருக்கோயிலில் முக்கிய நிகழ்வாக இன்று காலை துரியோதனன் படுகலமும், மாலை அக்னி வசந்த விழா என்னும் தீமிதி திருவிழா கொட்டும் மழையில் கைகளில் குடைகளுடன் பொதுமக்கள் தீமிதி திருவிழாவை ஆர்வமுடன் கண்டு களித்து மழையில் நனைந்தபடியே காப்பு கட்டிய பக்தர்கள் அக்னி குண்டத்தில் இறங்கி தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்
அப்பொழுது திடீரென்று ஆறுமுகம் என்ற பக்தர் தீயில் குண்டத்தில் இறங்கி ஓடியதில் கால் இடறி அக்னி குண்டத்தில் தவறி விழுந்தார் அங்கிருந்த கோயில் நிர்வாகிகள் அவரை உடனடியாக தீக்குண்டத்தில் இருந்து அவரை தூக்கிச் சென்றனர். மழையின் காரணமாக பாதி அளவிற்கு அக்னி குண்டம் நனைந்ததால் சிறு காயங்களோடு தப்பினார் இதனால் சற்று நேரம் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது
இதை எடுத்து தீ குண்டத்தில் தவறி விழுந்த நபரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளிக்கப்பட்டது மழையில் தீமிதி திருவிழா நின்றுவிடும் என்ற அச்சத்தில் இருந்த பக்தர்களுக்கு கோவில் நிர்வாகிகளின் கூட்டு முயற்சியால் தீமிதி திருவிழா வெற்றிகரமாக நடந்தேறி முடிந்தது இதை அடுத்து வான வேடிக்கைகளுடன் அம்மன் திருவீதி உலா மழையிலேயே நடைபெற்றது குறிப்பிடத்தக்கது .
English Summary
An incident occurred during the Thimithi festival at Sri Dharmaraja Temple in the pouring rainwhen a devotee fell into the firecausing a commotion