டெல்லி பயணம் தொடர்பாக வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!எதற்காக டெல்லி பயணம்?- செங்கோட்டையன் பதில்!
An end to rumors regarding the Delhi trip Why the Delhi trip Sengottaiyan answer
கோவை விமான நிலையத்தில் இன்று முன்னாள் அமைச்சர் மற்றும் அ.தி.மு.க. மூத்த தலைவர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், “டெல்லி செல்கிறீர்கள், அங்கு பா.ஜ.க. தலைவர்களை சந்திக்கிறீர்களா?” என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு பதிலளித்த அவர், “நான் டெல்லி செல்கிறேன். அங்கிருந்து வரரித்துவாருக்கு சென்று இறைவன் ராமரை தரிசனம் செய்ய விரும்புகிறேன். அது எனக்கு சற்றேனும் மன ஆறுதலாக இருக்கும். ஆனால், பா.ஜ.க. தலைவர்களை சந்திக்க நான் செல்லவில்லை. மேலும் நாளை எந்தவித முக்கிய அறிவிப்பையும் வெளியிடப்போவதில்லை” என தெளிவுபடுத்தினார்.
அத்துடன், “அ.தி.மு.க.வில் பிரிந்திருக்கும் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இல்லை. அனைவரும் ஒன்றாக சேர்ந்து பணியாற்ற வேண்டும், அ.தி.மு.க. வளர வேண்டும் என்பதே என் நோக்கம்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
செங்கோட்டையன் வெளியிட்ட இந்த விளக்கம், அண்மைக்காலமாக பரவியிருந்த “செங்கோட்டையன் பா.ஜ.க. தலைவர்களை சந்திக்கிறார்” என்ற ஊகங்களுக்கும், “அவர் நாளை முக்கிய அறிவிப்பு வெளியிடுவார்” என்ற தகவல்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
English Summary
An end to rumors regarding the Delhi trip Why the Delhi trip Sengottaiyan answer