அம்மா உணவகத்தில் இலவச உணவு... சென்னை மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு.!! - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் தலைநகரான சென்னை மாற்றுமல்லாது தமிழகம் முழுவதும் ஏழைகளின் பசியை போக்கும் பெரும் சேவையை அம்மா உணவகம் செய்து வருகிறது. அம்மா உணவகத்தின் மூலமாக பலரும், வயிறார சாப்பிட்டு தங்களின் வாழ்நாட்களை நகர்த்தி வருகின்றனர். 

இந்த நிலையில், கரோனா வைரஸின் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலாகியுள்ளது. இதனால் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரம் கடுமையான அளவு பாதிக்கப்பட்டுள்ளது. அரசு தேவையான உதவியை செய்தாலும், தன்னார்வலர்களும் தங்களால் இயன்ற உதவியை செய்து வருகின்றனர். 

இந்த சமயத்தில், தன்னார்வலர்கள் செய்ய நினைக்கும் உதவி மற்றும் பொருட்களை மாநகராட்சியிடம் வழங்கும் பட்சத்தில், மக்களிடம் அது அரசு மூலமாக கொண்டு சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் அடிப்படையில், தன்னார்வலர்கள் தங்களால் இயன்ற உதவியை செய்து வந்தனர். 

சென்னையில் உள்ள 407 அம்மா உணவகத்தில் இனி வரும் நாட்களில் உணவுகள் இலவசமாக வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார். மேலும், உணவு வாங்க வரும் நபர்களின் இடம், பெயர் மற்றும் அலைபேசி எண்கள் சேகரிக்க வேண்டும் என்றும், தன்னார்வலர்கள் மாநகராட்சிக்கு கொடுத்துள்ள நிதியில் இருந்து இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Amma unavagam food free announce by chennai corporation


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->