ஜோஹோ மெயிலுக்கு மாறிய அமித்ஷா..காரணத்தை பதிவிட்டு விளக்கம்!
Amitsha switched to Zoho Mail posted the reason and explanation
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா உள்நாட்டிலேயே தயாரான ஜோஹோ மெயிலுக்கு மாறியுள்ளார்.
கூகுள் மெயிலுக்கு மாற்றாக இருக்கும் என சென்னையை அடிப்படையாக கொண்டு 2008-ம் ஆண்டு ஜோஹோ மெயில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்நிலையில், எக்ஸ் வலைதளத்தில் அமித்ஷா வெளியிட்ட செய்தியில், அனைவருக்கும் வணக்கம். நான் ஜோஹோ மெயிலுக்கு மாறி விட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
என்னுடைய மாற்றம் செய்யப்பட்ட இ-மெயில் முகவரியை கவனித்து amitshah.bjp@zohomail.in ஆகும். வருங்காலத்தில் மெயில் அனுப்புவதற்கு இந்த முகவரியை பயன்படுத்தவும் என மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பதிவிட்டு உள்ளார்.
மேலும் அவர், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை நினைவுப்படுத்தும் வகையில், இந்த விசயத்தில் நீங்கள் கவனம் செலுத்தியதற்காக நன்றி என அந்த பதிவை முடித்துள்ளார். இந்திய ஏற்றுமதி பொருட்களுக்கு 50 சதவீதம் வரி விதிப்பு என்ற டிரம்பின் முடிவை தொடர்ந்து, பொதுமக்கள் இந்தியாவில் தயாராகும் பொருட்களை பயன்படுத்த வலியுறுத்தப்பட்டு வரும் நிலையில், அவருடைய இந்த மாற்றம் பற்றிய அறிவிப்பு வெளிவந்துள்ளது.
English Summary
Amitsha switched to Zoho Mail posted the reason and explanation