விமர்சனங்களுக்கு நடுவில் தவெக தலைவர் விஜய் கரூருக்கு நேரில் செல்ல திட்டம்!போலீசாரிடம் அனுமதி கோர திட்டம்?
Amid criticism plans to visit Thaweka leader Vijay Karur in person Plans to seek permission from the police
கரூரில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யின் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல், 40 உயிர்களை காவுகொண்டது. இந்த துயரச் சம்பவம் தமிழகத்தையே உலுக்கியுள்ளது.
விஜய், சம்பவம் நடந்த உடனே கரூரில் தங்கி பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்காமல், நேராக தனியார் விமானத்தில் சென்னை சென்றது கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. மேலும், அவர் மூன்று மணி நேரம் கழித்தே இரங்கல் ட்வீட்டை வெளியிட்டது ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
நேற்று, விஜய் நாமக்கல் மற்றும் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டார். காலை 8.30 மணிக்கு நாமக்கல்லில் பிரச்சாரம் தொடங்க வேண்டியிருந்தது, ஆனால் விஜய் மதியம் 12 மணிக்கு தான் நிகழ்வில் கலந்து கொண்டார். தொடர்ந்து, கரூரில் மாலை 12 மணிக்கு தொடங்க வேண்டிய பிரச்சாரம் இரவு 7 மணிக்குத் தான் ஆரம்பமானது.
விஜய் வந்தவுடன், கூட்டம் அதிகமாக இருந்ததால் அங்கு மின் தடையும் ஏற்பட்டது. விஜய் பேச்சு நடத்திக்கொண்டிருக்கும்போதே சிலர் மயங்கினர். அவர்களுக்கு விஜய் தண்ணீர் கேன் வழங்கினார். ஆனால் விஜய் கூட்டத்தை முடித்துக்கொண்டு கிளம்பிய பின்னர் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் பெண்கள், குழந்தைகள் உள்பட 40 பேர் உயிரிழந்தனர்.
சம்பவம் நடந்தவுடன், மாநில அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் திமுக அமைச்சர்கள் மருத்துவமனைக்கு விரைந்து சென்றனர். ஆனால், விஜய் மற்றும் தவெக நிர்வாகிகள் யாரும் மருத்துவமனைக்கு செல்லவில்லை.
விஜய், திருச்சி விமான நிலையத்திலிருந்து நேராக சென்னை சென்றார். அங்கு சென்ற பின் தான்,“இதயம் நொறுங்கிப் போயுள்ளது; கரூரில் உயிரிழந்த சகோதர, சகோதரிகளின் குடும்பங்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல். சிகிச்சை பெறுபவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன்”என்று ட்வீட்டில் இரங்கல் பதிவு வெளியிட்டார்.இந்த நடத்தை மீது கடும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இந்நிலையில், விஜய் கரூருக்கு நேரில் சென்று பாதிக்கப்பட்ட குடும்பங்களை சந்திக்கத் தீர்மானித்துள்ளார். இதற்காக, கரூர் காவல்துறையிடம் அனுமதி கேட்க உள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.விஜயின் இந்த முடிவு, கரூரில் துயரத்தில் உள்ள மக்களுக்கு ஆறுதல் அளிக்கும் ஒரு முயற்சியாகக் கருதப்படுகிறது.
English Summary
Amid criticism plans to visit Thaweka leader Vijay Karur in person Plans to seek permission from the police