விஜய்க்கு கூட்டணியே சிக்கல்! அதிமுக-பாஜக-தவெக கூட்டணி.. ஸ்டாலினுக்கு போன உளவுத்துறை ரிப்போர்ட்! - Seithipunal
Seithipunal


தமிழக அரசியலில் நடிகர் விஜயைச் சுற்றி பெரிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ள புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.
அதாவது, அதிமுக – பாஜக – தமிழக வெற்றி கழகம் (TVK) ஆகிய கட்சிகள் ஒன்றாக என்.டி.ஏ கூட்டணியில் இணைந்தாலும், அது விஜய்க்கு சாதகமாக இருக்காது... மாறாக ஆளும் திமுகவிற்கே அதிக நன்மை ஏற்படும் என்று உளவுத்துறை சார்பாக தயாரிக்கப்பட்ட ரிப்போர்ட் ஒன்று முதல்வரிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த ரிப்போர்ட் அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.உளவுத்துறை ஆய்வின்படி, விஜய் தனித்து போட்டியிட்டால் பெரிய தாக்கத்தை உருவாக்க முடியும். ஆனால் அவர் பாஜக மற்றும் அதிமுக கூட்டணியில் இணையும்போது, அவரது வலிமையும், தனித்துவமான அரசியல் பிம்பமும் குறைந்துவிடும் என கூறப்பட்டுள்ளது.

தி பிரிண்ட் செய்தி நிறுவனம் வெளியிட்ட தகவலின்படி, திமுக தரப்பே ரகசியமாக நடத்திய கருத்துக்கணிப்பிலும் இதே மாதிரியான முடிவுகள் தான் வந்துள்ளன.அந்த சர்வேயின் படி, விஜயின் தமிழக வெற்றி கழகம் தனித்துப் போட்டியிட்டால் சுமார் 23 சதவீத வாக்குகளை பெறும் திறன் கொண்டுள்ளது.இந்த ஆய்வு மாநிலம் முழுவதும் 2.91 லட்சம் வாக்காளர்களிடம் நடத்தப்பட்டதாக கூறப்படுகிறது — ஒவ்வொரு தொகுதியிலும் சராசரியாக 1,200 பேரிடம் மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன.

அதே ஆய்வில், அதிமுக – பாஜக – தவெக கூட்டணி வந்தால் திமுகக்கு 50 சதவீத வாக்கு, என்.டி.ஏ கூட்டணிக்கு 35 சதவீத வாக்கு, சீமானின் நாம் தமிழர் கட்சிக்கு 12 சதவீத வாக்கு, மற்ற கட்சிகளுக்கு 3 சதவீத வாக்கு கிடைக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால் அதிமுக – பாஜக கூட்டணியில் உள்ள உள்கட்சி பூசல்கள், பாஜகவின் மத ரீதியிலான அரசியல், மற்றும் தமிழக வாக்காளர்களின் எதிர்ப்பு போக்கு ஆகியவை இக்கூட்டணியின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் என உளவுத்துறை கூறுகிறது.

விஜயின் கட்சி தனியாக போட்டியிட்டால், திமுகவின் வாக்கு சதவீதம் 45 ஆக குறையும் என்றும், அதிமுக – பாஜக கூட்டணி 22 சதவீதம், விஜயின் TVK 23 சதவீதம் பெறும் எனவும் ஆய்வு கூறுகிறது.

இதையடுத்து, விஜய் தற்போது “பாஜகவுடன் சேரலாமா? அல்லது பாஜக இல்லாமல் அதிமுகவுடன் மட்டுமா கூட்டணி அமைப்பது?” என்ற கடினமான முடிவை எடுப்பதில் தீவிர ஆலோசனையில் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனெனில், விஜய் முன்பு பாஜகவை தனது கொள்கை எதிரி என வெளிப்படையாகக் கூறியுள்ளார்.இப்போது அவரே முதல் தேர்தலிலேயே பாஜக கூட்டணியில் சேர்ந்துவிட்டால், அது அவரின் அரசியல் பயணத்தையே ஆபத்துக்குள்ளாக்கும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மேலும், விஜய் தனது சமூக நீதி அரசியலில் தலித், கிறிஸ்துவர் வாக்குகளை குறிவைத்துள்ளார். ஆனால் பாஜகவுடன் இணைந்தால் அந்த வாக்கு அடிப்படையே குறைந்து போகும் என்ற கணிப்பும் வெளியாகியுள்ளது.

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க விஜய் விரும்பினாலும், பாஜக கூட்டணியை முறித்துவிட்டு வாருங்கள் என்று எடப்பாடியிடம் அவர் கேட்க வேண்டியிருக்கும். ஆனால் — எடப்பாடி அதற்கு சம்மதிப்பாரா? டெல்லி பாஜக அதனை அனுமதிப்பதா?என்ற கேள்விகளே தற்போது தமிழக அரசியல் வட்டாரங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளது.

விஜய்க்கு இது அரசியலின் மிகப்பெரிய சவாலாகவே மாறியுள்ளது.அவர் இதை எப்படிச் சமாளிப்பார்? எந்த முடிவை எடுப்பார்?அதுதான் தற்போது தமிழக அரசியலில் அனைவரும் காத்திருக்கும் மிகப் பெரிய கேள்வியாகியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Alliance is the problem for Vijay AIADMK BJP TVk alliance Intelligence report went to Stalin


கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக - தவெக கூட்டணி அமைய வாய்ப்பு இருக்கிறதா?




Seithipunal
--> -->