களைகட்டும் போகி பண்டிகை - சென்னையில் அதிகரிக்கும் காற்று மாசு.! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் தை மாதம் முதல் நாள் உழவர் திருநாளான பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு வருகிறது. இது ஒரு பாரம்பரிய பண்டிகையாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் கொண்டாடப்படும் விழா போகி பண்டிகை. இந்த பண்டிகையின் போது, நமது முன்னோர்கள் வீட்டில் உள்ள இயற்கை சார்ந்த தேவையில்லா பொருட்களை எரித்து பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் கொண்டாடி வந்துள்ளனர்.

அந்த வகையில், இந்த ஆண்டுக்கான போகி பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தப் பண்டிகையை முன்னிட்டு மக்கள் பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி பண்டிகையை வரவேற்று வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னை,மயிலாப்பூர், சைதாப்பேட்டை, நுங்கம்பாக்கம், எழும்பூர், கிண்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மக்கள் போகி கொண்டாடி, தைத்திருநாளை வரவேற்கும் பொருட்டு பழைய பயனற்ற பொருட்களை எரித்து போகி கொண்டாடி வருகின்றனர். 

இந்தப் போகி பண்டிகையை முன்னிட்டு சிறுவர்கள் மேளம் அடித்தும் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில், சென்னையில் பழைய பொருட்களை எரித்து மக்கள் போகி பண்டிகை கொண்டாடி வருவதால் நகரம் முழுவதும் புகைமூட்டம் அதிகரித்துள்ளது. அதிகாலையிலேயே சராசரி அளவை விட புகைமூட்டம் அதிகரித்து காணப்படுவதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர்.

மேலும், காற்றின் தரமும் சென்னையில் மோசமடைந்து, நகர் முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளதால் சென்னை மணலி பெருங்குடியில் 277 என்ற அளவில் மோசமான அளவில் உள்ளது. அத்துடன் எண்ணூர், அரும்பாக்கம், ராயபுரம், கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளிலும் காற்றின் தரக்குறியீடு அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

air pollution increase in chennai for bogi festival


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->