#BREAKING:: பதற்றத்தில் அரியலூர்.. அண்ணாமலையின் உருவப்படம் எரிப்பு..அதிமுகவினர் அதிரடி கைது..!! - Seithipunal
Seithipunal


தமிழக பாஜக தலைவராக அண்ணாமலையின் செயல்பாடுகளை கண்டித்து தமிழ்நாடு பாஜக ஐடி விங் நிர்வாகிகள் அக்கட்சியிலிருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.

இதற்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கடுமையான வார்த்தைகளால் அதிமுகவை விமர்சனம் செய்தார். இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் "பாஜக நிர்வாகிகளை தங்கள் கட்சியில் இணைத்து தான் பெரிய கட்சி என நிரூபிக்க வேண்டிய நிலையில் திராவிட கட்சிகள் உள்ளன. ஒவ்வொரு வினைக்கும் எதிர் வினை உண்டு.

நான் தமிழகத்திற்கு இட்லி சுடவோ, தோசை சுடவோ வரவில்லை. பாஜக தலைவர் என்ற நாற்காலியை மேனேஜர் போல தேய்த்து கொண்டிருக்க வரவில்லை. அம்மையார் ஜெயலலிதா மற்றும் கருணாநிதி போல் நானும் ஒரு தலைவன். என்னோட நடவடிக்கைகள் கடுமையாக இருக்கும். சில கடுமையான முடிவுகளை எடுக்க நேரிட்டால் கட்சியிலிருந்து சிலர் விலகிப் போகத்தான் செய்வார்கள்" என்ன செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார்.

இந்த நிலையில் நேற்று என்னுடைய மனைவி ஆயிரம் ஜெயலலிதாவிற்கு சமம் என செய்தியாளர்கள் சந்திப்பில் பேசி இருந்தார். இத்தகைய கருத்து அதிமுகவினர் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. 

அண்ணாமலைக்கு எதிராக சமூக வலைதளங்களில் அதிமுகவினர் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அதுக்கு தமிழக பாஜக தலைப்பில் இருந்தும் பதிலடி தரப்படுகிறது.

இந்த நிலையில் தமிழக பாஜக தலைவர் தன்னை ஜெயலலிதா உடன் ஒப்பிட்டு பேசியதை கண்டித்து அரியலூர் மாவட்ட அதிமுகவினர் அண்ணாமலையின் உருவப் படத்தை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அனுமதி இன்றி போராட்டத்தில் ஈடுபட்ட 25க்கும் மேற்பட்ட அதிமுகவினரை கைது செய்துள்ளனர். இதனால் அரியலூர் மாவட்டத்தில் அதிமுக மற்றும் பாஜக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

AIADMK burnt Annamalai photo in Ariyalur


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->