#BREAKING : மழை வெள்ளத்தால் பாதிப்பு.. குடும்ப அட்டைக்கு தலா ரூ.1000 நிவாரணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு.! - Seithipunal
Seithipunal


சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். 

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் முதல் தொடங்கி தீவிரமடைந்து வருகிறது. இதனால், பல்வேறு இடங்களில் கனமழை கொட்டி தீர்த்தது.

இதையடுத்து, சில நாட்களுக்கு முன்பு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கியது.

அதிலும் குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள சீர்காழியில் மட்டும் சுமார் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆறு மணி நேரத்தில் 44 செ.மீ. மழை பெய்துள்ளது.

இதனால், சீர்காழி மற்றும் அதனை சுற்றியுள்ள 32 கிராமங்களில், வெள்ளிநீர் புகுந்து மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன. அதேபோல், சீர்காழியில் உள்ள சட்டநாதர் கோவில், திருக்கடையூர் அமிர்தகடேஸ்வரர் கோவில், தையல்நாயகி அம்மன் உடனுறை வைத்தியநாதசாமி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது..

இதற்காக சீர்காழியில் மட்டும் சுமார் 9 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, அங்கு வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கன மழையால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை நேரில் ஆய்வு செய்தார்.

சீர்காழி பகுதியில் மழை வெள்ளப் பாதிப்புகளை பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப்பொருட்களை வழங்கினார்.

இந்த நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையினால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள குடும்பங்களுக்கு நிவாரணத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, சீர்காழி மற்றும் தரங்கம்பாடி வட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1000 இழப்பீடு வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளர். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Affected by rain and flood Relief of Rs.1000 per ration card


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->