ஏஐ இணைப்பை அதிகரிக்க இந்தியா - அமெரிக்கா இடையே கடல்சார் கேபிள் வழித்தடம்; கூகுள் சிஇஓ அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


'அனைவரின் நலன், அனைவரின் மகிழ்ச்சி' என்ற கருப்பொருளில், ஐந்து நாள் சர்வதேச செயற்கை நுண்ணறிவு (AI) உச்சி மாநாடு, இன்று டெல்லி பாரத் மண்டபத்தில் தொடங்கியது. சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்கள், ஸ்டார்அப் நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் இதில் பங்கேற்றுள்ளன.

அதன்படி, இந்த கண்காட்சியில் 02 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டுகிறது. இந்த மாநாட்டில் நாளை 19-ஆம் தேதி பிரதமர் மோடி உரையாற்றவுள்ளார்.

அத்தோடு, இந்த ஏஐ உச்சி மாநாட்டில் கூகுள் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை வரும் 20-ஆம் தேதி பங்கேற்று உரையாற்றவுள்ளார். இதற்காக இந்தியா வந்துள்ள சுந்தர் பிச்சை, டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து உரையாற்றியுள்ளார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:

ஏஐ துறையில் இந்தியா மேற்கொண்டு வரும் பணிகள் பற்றியும், இந்திய மாணவர்கள் மற்றும் நிபுணர்களுக்கு கூகுள் நிறுவனம் வழங்கவுள்ள வாய்ப்புகள் குறித்து கலந்துரையாடியதாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன், டெல்லியில் நடைபெற்ற கூகுள் நிகழ்ச்சியில் பேசிய சுந்தர் பிச்சை, இந்தியா - அமெரிக்கா இடையே ஏஐ இணைப்பை அதிகரிக்க கடல்சார் கேபிள் வழித்தடத்தை உருவாக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

India to US submarine cable route to increase AI connectivity


கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?



Advertisement

கருத்துக் கணிப்பு

தற்போதைய நிலையில் எந்த கூட்டணி வலுவாக உள்ளது?




Seithipunal
--> -->