2026ல் திமுக தோல்வியடைய 3 முக்கிய காரணம் இருக்கு! சொல்கிறார் அதிமுக முன்னாள் அமைச்சர்!
ADMK RB Udhayakumar DMK 2026 election
தமிழகத்தில் பாலியல் வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அதை தடுத்து நிறுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்தும், தஞ்சையில் இன்று மாநகர அ.தி.மு.க சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டத்திற்கு முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமை வகித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்திற்கு செல்லாமல் புறக்கணித்து வந்த முதலமைச்சர் ஸ்டாலின், திடீரென டெல்லி செல்கிறார்.
அவரை இந்த நிலையில் டெல்லிக்கு அழைத்திருப்பது, அமலாக்கத்துறையின் விசாரணைகளில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வதற்காகத்தான் என்ற சந்தேகம் எழுகிறது" என்றார்.
மேலும், "திமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீர்கெட்டுள்ளது. இதேபோல் 2011-ல் மின்வெட்டால் ஆட்சியை இழந்த திமுக, இப்போது மக்களின் பாதுகாப்பு, சட்டம் ஒழுங்கு, ஊழலால் 2026-ல் மீண்டும் தோல்வி கண்டடையும்" என்றும் கூறினார்.
"மக்கள் ஆதரவு அ.தி.மு.க பக்கம் திரும்பி வருகின்றது. வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி பழனிசாமி மீண்டும் முதலமைச்சராக பதவியேற்பது உறுதி" என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
English Summary
ADMK RB Udhayakumar DMK 2026 election