வழக்கறிஞரிடம் 96 லட்சம் பணமோசடி - அதிமுக முன்னாள் தலைவர் கைது.!!
admk karoor ex leader arrested for money fraud
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பிரின்ஸ்கிப்ஸன் என்பவர், கரூர் அருகே கோதூர் என்ற இடத்தில் சுமார் 7 ஏக்கர் நிலம் வாங்குவதற்காக, கரூரைச் சேர்ந்த நிலத்தரகர் ஆர்.எஸ்.ராஜாஎன்பவரிடம் முன்பணமாக ரூ.96 லட்சம் கொடுத்துள்ளார். ஆனால், அந்த நிலத்தை வாங்க காலதாமதம் செய்ததால், நில உரிமையாளர்கள் அதனை வேறு ஒருவருக்கு விற்பனை செய்ததால் நிலத்தரகர் ஆர்.எஸ்.ராஜா முன்பணமாக பெற்ற ரூ.96 லட்சத்தை பிரின்ஸ்கிப்ஸனிடம் திரும்பக் கொடுத்துள்ளார்.
அதை வாங்க மறுத்த பிரின்ஸ்கிப்ஸன், தனக்கு நிலம்தான் வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார். இதையறிந்த கரூர் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவரும், அதிமுக விவசாய அணி மாவட்டச் செயலாளருமான பாலமுருகன், இந்தப் பிரச்சினையை முடித்து தருவதாக ஆர்.எஸ்.ராஜாவிடம் தெரிவித்துள்ளார்.

அதனை உண்மை என்று நம்பிய ஆர்.எஸ்.ராஜா, கரூர் நீதிமன்ற வழக்கறிஞர் ரகுநாதன் மூலம் ரூ.96 லட்சத்தை கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பாலமுருகனிடம் வழங்கியுள்ளார். அதைப் பெற்றுக்கொண்ட பாலமுருகன், அந்தத்தொகையை பிரின்ஸ்கிப்ஸனிடம் வழங்காமல், தானே வைத்துக்கொண்டுள்ளார்.
இதையறிந்த வழக்கறிஞர் ரகுநாதன், பாலமுருகனிடம் ரூ.96 லட்சம் பணத்தை திருப்பிக் கேட்டபோது, அவர் தர மறுத்ததுடன், கொலைமிரட்டல் விடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த ரகுநாதன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லாவிடம், புகார் அளித்தார். இதையடுத்து, மாவட்ட குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து நேற்று பாலமுருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
admk karoor ex leader arrested for money fraud