அதிமுக முன்னாள் அமைச்சருக்கு திமுகவில் முக்கிய பதவி!
ADMK DMK Anwar Raja
பா.ஜ.க.வுடன் அ.தி.மு.க. கூட்டணி வைத்ததைத் தொடர்ந்து, அந்தக் கட்சியை விட்டு வெளியான அன்வர் ராஜா சமீபத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் சேர்ந்தார்.
இப்போது, அவருக்கு தி.மு.க.வில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தி.மு.க. பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிவிப்பில், அன்வர் ராஜா தி.மு.க. இலக்கிய அணியின் தலைவராக நியமிக்கப்படுகிறார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தப் பொறுப்பை புலவர் இந்திரகுமாரி வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.