அரங்கேறிய கொடூர கொலை! இதெல்லாம் வெட்கக்கேடு - கொந்தளிக்கும் முன்னாள் அமைச்சர்! - Seithipunal
Seithipunal


புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை பகுதியை சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்பவர், திருச்சி காஜாமலையில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் இளநிலை படிப்பு பயின்று வந்தார். 

இன்று திருச்சி ஸ்ரீரங்கம் கண்பதி நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்ற ரஞ்சித், அங்கே காவிரி ஆற்றின் வெள்ளப்பெருக்கை கரையில் நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டு இருந்துள்ளார்.

அதே பகுதியை சேர்ந்த சிலர் மதுபோதையில், 'வெளியூர் காரனுக்கு இங்கு என்ன வேலை?' எனக்கூறி ரஞ்சித் கண்ணனை கட்டையால் தாக்கியுள்ளனர். 

இதில் படுகாயமடைந்த ரஞ்சித் கண்ணன், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்கு பதிவு செய்துள்ள போலீசார், 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில், அதிமுக முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில், "நமது விராலிமலை தொகுதி அன்பு நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவர் ரஞ்சித் கண்ணன் ஸ்ரீரங்கம் கீதாபுரம் அருகே உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றிருந்தபோது,

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து வருவதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தவரை மதுபோதையில் வந்த சிலர், 'வெளியூர் காரனுக்கு இங்கு என்ன வேலை?' எனக்கூறி கட்டையால் தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்த செய்தி மிகுந்த அதிர்ச்சியும், வேதனையையும் அளிக்கிறது.

உயிரிழந்த கல்லூரி மாணவர் தம்பி ரஞ்சித் கண்ணன் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

இச்சம்பவத்துக்கு காரணமான அனைவர் மீதும் தயவு தாட்சண்யமின்றி கடும் நடவடிக்கை எடுத்திட வேண்டுமென விடியா அரசை வலியுறுத்துகிறேன். இந்த மதுபோதை கொலைச் சம்பவத்தில் கைது செய்யப்பட்ட 5 பேரில், 2 சிறுவர்களும் அடங்கியிருப்பது அதிர்ச்சி தரும் வெட்கக்கேடு" என்று சி.விஜயபாஸ்கர் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ADMK C Vijayabaskar condemn Pudukottai College Student death


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->