#JustIN: முன்னாள் அமைச்சரிடம் ரூ.10 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடுத்த நடிகை..! - Seithipunal
Seithipunal


நடிகை சாந்தினி முன்னாள் அமைச்சர் மணிகண்டனிடம் ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு வழக்கு தொடுத்துள்ளார்.

அதிமுகவின் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது நாடோடிகள் திரைப்படத்தில் நடித்த துணை நடிகை சாந்தினி கருக்கலைப்பு, பாலியல் பலாத்காரம், திருமண ஆசை காட்டி ஏமாற்றுதல் உட்பட பல புகார் அளித்தார். இந்த புகாரின் பேரில் கைது செய்யப்பட்ட மணிகண்டன், சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் நிபந்தனை ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார்.

இந்நிலையில், மலேசியாவை சார்ந்த துணை நடிகை சாந்தினி ரூ.10 கோடி இழப்பீடு கேட்டு சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனுவில், கடந்த 5 வருடங்களுக்கு முன்னதாக நானும் - மணிகண்டனும் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்தோம். 

தற்போது நடைபெற்று வந்த பிரச்சனையால், இங்கு தங்கி வழக்கை கவனித்து வருகிறேன். இதனால் எனக்கு பொருளாதார ரீதியாக பிரச்சனை ஏற்பட்டுள்ளது. கணவன் - மனைவி பிரச்சனை தொடர்பான விவகாரத்தில், ரூ.10 கோடி இழப்பீடு எனக்கு வேண்டும். 

இந்த மனுவை விரைந்து விசாரித்து, இடைக்கால நிவாரண தொகையும் உடனடியாக வழங்கப்பட வேண்டும் " என்று தெரிவித்துள்ளார். இந்த மனு மீதான விசாரணையை ஏற்றுக்கொண்டுள்ள சைதாப்பேட்டை நீதிமன்றம், ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி விசாரணை செய்வதாக தெரிவித்துள்ளது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actress Sandhini Case Appeal at Saidapet Court about compensation to Former Minister Manikandan Rs 10 Crore


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->