#வரிஏய்ப்பு_விஜய்: கதறல் முதல் கண்டிப்பு வரை.. ட்விட்டரில் விஜயை வறுத்து தொங்கவிடும் நெட்டிசன்கள்..! - Seithipunal
Seithipunal


திரைத்துறையில் உச்ச நட்சத்திரமாகவும், ரசிகர்களால் அண்ணா, தளபதி, இளையதளபதி என்று அழைக்கப்படுபவர் நடிகர் விஜய். இவர் கடந்த 2012 ஆம் வருடம் ரோல்ஸ் ராயல்ஸ் கார் வாங்கிய நிலையில், இதனை இறக்குமதி செய்து வரி விலக்கு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த மனு தொடர்பான விசாரணை நிறைவு பெற்று, இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம் சுப்பிரமணியம் அமர்வில் தீர்ப்பு வெளியாகியுள்ளது. 

இது குறித்த தீர்ப்பில், " இவ்வழக்கு விசாரணை தள்ளுபடி செய்யப்படுகிறது. சட்டத்திற்கு விரோதமாக வரி ஏய்ப்பு செய்வது போல, வரிவிலக்கு கேட்டு மனுதாக்கல் செய்துள்ளதால் ரூ.1 இலட்சம் அபராதம் விதித்து உத்தரவிடப்படுகிறது. ரூ.1 இலட்சம் அபராதத்தை தமிழக முதல்வரின் கொரோனா நிவாரண நிதியில் செலுத்த வேண்டும். 

திரைத்துறையில் கதாநாயகர்கள் உண்மையான வாழ்க்கையிலும் கதாநாயகர்களாக இருக்கவேண்டும். ரீல் ஹீரோக்கள் ரியலில் ரீலாக இருக்க கூடாது. காருக்கான வரியை 2 வாரத்திற்குள் செலுத்த வேண்டும் " என்று தெரிவிக்கப்பட்டது. 

வளரும் வரை மக்களை கவருவதற்கு பல படங்களில் நடித்துவிட்டு, தனக்கென தனி கூட்டம் உருவாகிவிட்டது என்ற மமதையில் நாம் சொன்னால் அரசே கேட்கும் என்று நினைத்தால், இந்த மாதிரி நீதிமன்றத்தால் அறிவுரை வழங்கி ஆப்புகள் வாங்க நேரிடமும் என்பது நடிகர் விஜயின் விஷயத்தில் உறுதியாகியுள்ளது. 

இவர் நடித்த படங்களில் இறுதியாக சில வருடங்களில் வெளியான படம் மக்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தும் விதத்தில், சமூக நீதிக்காக போராடுவது போலவும் அமைந்த நிலையில், காருக்கு வரி ஏய்ப்பு விலக்கு கேட்டு வழக்கு தொடுத்திருப்பது, தீர்ப்பில் விஜய்க்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும், நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த சமயத்தில் நடிகர் விஜய் என்பதை கூட குறிப்பிடாமல், விஜய் என்றும் மட்டும் குறிப்பிட்டு வாதாடியுள்ளனர். விஜயின் பணி விபரம் குறித்து நீதிபதிகள் கேட்கையில், அது நடிகர் விஜய் என்பது உறுதியானது. இதனால் அதிருப்தியடைந்த நீதிபதிகள் விஜய்க்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள். 

இத்தனை புரட்சிகள் பேசிய நடிகர் விஜய் இறுதியில் வரிஏய்ப்பு தொடர்பான புகார் அளவில் சிக்கி நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால், பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்களில் நடிகர் விஜயை வறுத்தெடுக்கும் பொருட்டு, #வரிகட்டுங்கவிஜய் என்ற ஹாஷ்டேக்கையும் ட்ரெண்டிங் செய்துள்ளனர். இது தொடர்பான பதிவுகள் வைரலாகி வருகிறது. 

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Vijay Rolls Royals Car Tax Issue Chennai HC Judgement Twitter Handlers Trolled


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->