மக்களவைத் தேர்தலில் போட்டியிட போகிறாரா வடிவேலு? பரபரப்பில் அரசியல் கட்சிகள்.!
actor vadivel participate election
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் நடிகர் வடிவேலு. திரையுலகில் இருந்து வந்த வடிவேலுவை திமுக தனக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய அழைத்தது. அந்த சமயத்தில் வடிவேலுவிற்கு திரை வாய்ப்புகள் குறைவாக இருந்ததால் அவரும் தமிழ்நாடு முழுவதும் திமுக மேடைகளில் பிரச்சாரத்தை பலமாக மேற்கொண்டார். அந்தத் தேர்தலில் திமுக வெற்றி பெறவில்லை. ஜெயலலிதா முதலமைச்சரானார்.

இதையடுத்து வடிவேலுக்கு திரையுலகில் யாரும் வாய்ப்பு கொடுக்கவில்லை. இதனால் அரசியலை விட்டு ஒதுங்கி இருந்த வடிவேலு இத்தனை நாட்கள் அரசியல் குறித்து பேசாமல் இருந்த நடிகர் வடிவேலு, தற்போது மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துள்ள நிலையில் அரசியல் குறித்தும், திமுக மற்றும் கருணாநிதி குறித்தும் அதிகம் பேசத் தொடங்கியுள்ளார்.
இதனால், எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலுவை திமுக சார்பில் ஏதாவது ஒரு தொகுதியில் போட்டியிட வைக்கலாமா என்பது குறித்து அக்கட்சி தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து வடிவேலுவுடனும் கலந்துரையாடப்பட்டிருப்பதாகவும், அதற்கு அவரும், சம்மதம் தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதன் படி, எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் வடிவேலு திமுக சார்பில் போட்டியிடப் போகிறார் என்பது பேசுபொருளாகியுள்ளது.
English Summary
actor vadivel participate election