நீட் விவகாரம்.. உத்தரவை தாழ்மையுடன் ஏற்றுக்கொள்கிறேன் என நடிகர் சூர்யா ட்வீட்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் நீட் தேர்வு அச்சத்தால் ஒரே நாளில் 3 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்ட விவகாரம் குறித்து நடிகர் சூர்யா நேற்று ஆவேச அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார் அதில், "கொரோனா அச்சத்தால் வீடியோ கான்பரன்ஸிங் மூலம் நீதி வழங்கும் நீதிமன்றம், மாணவர்களை அச்சமில்லாமல் போய் தேர்வெழுத உத்தரவிடுகிறது." என்று நடிகர் சூர்யா அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். நடிகர் சூர்யாவின் இந்த கருத்துக்கு சமூக வலைதளத்தில் ஆதரவு பெருகியது.

நடிகர் சூர்யா மீது நடவடிக்கை கோரி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் கடிதம் எழுதியுள்ளார். உயிருக்கு பயந்து காணொலியில் நீதிமன்றத்தை நடத்துவதாக கூறும் நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க கோரி தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகளில் ஒருவரான எஸ்.எம்.சுப்ரமணியம் எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

நேற்று, நடிகர் சூர்யா மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தேவையில்லை என, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்தது. நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் அனுப்பிய கடிதத்தின் அடிப்படையில் விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு, விசாரணைக்கு பின் சூர்யா மீது நடவடிக்கை தேவையில்லை என உத்தரவு பிறப்பித்தது. 

மேலும், பொது விவகாரங்களில் கருத்து கூறும் போது நடிகர் சூர்யா கவனமாக பேசவேண்டும் என்றும், நீதிபதிகளையோ, நீதிமன்றத்தையோ அவமானப்படுத்தும் வகையில் பேசக்கூடாது என்றும் நடிகர் சூர்யாவுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தி இருந்தனர்.

இந்நிலையில், நீதிமன்றத்தின் உத்தரவு குறித்து நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை, இந்திய நீதித்துறை பெருந்தன்மை எனக்கு நிறைவை தந்துவிடாது. எனக்கு இந்திய நீதித்துறை மீது பெரிய மதிப்பும், மரியாதையும் உள்ளது. இந்தியாவில் மக்களுக்கு இருக்கும் அரசியலமைப்பு சட்ட உரிமைகளை பாதுகாக்கும் ஒரே நம்பிக்கை நீதித்துறை தான். சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்த நியாயமான தீர்ப்பை தாய்மையுடன் பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

actor surya tweet about court order


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->