குழந்தைகளுடன் சிவகார்த்திகேயனின் க்யூட் கிறிஸ்துமஸ்!
actor sivakarthikeyan Christmas Festival
உலகெங்கும் அமைதி மற்றும் அன்பின் திருநாளான கிறிஸ்துமஸ் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. திரையுலகைச் சேர்ந்த பல பிரபலங்களும் தங்கள் கொண்டாட்டப் புகைப்படங்களைப் பகிர்ந்து வரும் நிலையில், நடிகர் சிவகார்த்திகேயனின் இல்லத்துக் கொண்டாட்டம் இணையத்தில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
திரையுலகில் பிஸியான நடிகராக இருந்தாலும், குடும்பத்திற்காக நேரம் ஒதுக்குவதில் சிவகார்த்திகேயன் எப்போதும் முன்மாதிரியாகத் திகழ்பவர்.
க்யூர் போட்டோஷூட்: தனது அன்பு குழந்தைகளான ஆராதனா, குகன் மற்றும் குட்டிப் பையன் பவன் ஆகியோருடன் சிவகார்த்திகேயன் இருக்கும் புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.
சாண்டா கொண்டாட்டம்: சாண்டா கிளாஸ் தொப்பிகள் மற்றும் வண்ணமயமான கிறிஸ்துமஸ் மரம் எனப் பண்டிகைக்கே உரிய உற்சாகத்துடன் இந்தப் புகைப்படங்கள் அமைந்துள்ளன.
வைரலாகும் இன்ஸ்டா பதிவு:
தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ள இந்தப் பதிவிற்கு லட்சக்கணக்கான லைக்குகளும், ரசிகர்கள் மற்றும் திரையுலக நண்பர்களின் வாழ்த்துகளும் குவிந்து வருகின்றன. "அனைவருக்கும் இனிய கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துகள்" எனத் தனது பாணியில் அவர் அன்பைப் பகிர்ந்துள்ளார்.
English Summary
actor sivakarthikeyan Christmas Festival