சாகுற நிலையில் இருப்பவர் நடிகர் ரஜினி?....அமைச்சர் துரைமுருகன் கடும் தாக்கு! - Seithipunal
Seithipunal


சென்னையில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில், நடிகர் ரஜினிகாந்த் கலந்து கொண்டு பேசினார். அப்போது, மூத்த அமைச்சர்களை வைத்துக்கொண்டு எப்படி சமாளிக்கிறீர்கள் என்று முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலினை பார்த்து கேட்டார்.

இந்நிலையில் இது தொடர்பாக அமைச்சர்  துரைமுருகன்  கேள்வி எழுப்பப்பட்ட நிலையில் அவர் கூறியதாவது, மூத்த நடிகர்கள் எல்லாம் பல்லு போயி, தாடி வளர்ந்து, சாகுற நிலையில் உள்ளவர்கள் மற்றும் வயதானவர்கள் எல்லாம் நடிப்பதனால்தான், இளைஞர்களுக்கு வாய்ப்பு இல்லாமல் போய்விடுகிறது என்றும், அதை மறந்து விட்டு  ரஜினிகாந்த் பேசுவதாக தெரிவித்தார்.

முன்னதாக, புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய ரஜினி காந்த், முதலமைச்சரின் கையில் புத்தகத்தை பெற்றது பெருமை அளிக்கிறது என்றும், கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.

மேலும் கருணாநிதி என்று கூறினால் சினிமா, இலக்கியம், அரசியல். கலைஞர் எனும் தாய் என்ற நூல் காவியமாக அமைந்துள்ளது.தமிழினத்திற்காக தொடர்ந்து போராடிய தலைவர் கருணாநிதி என்றும், முன்னாள் முதல்வர் கருணாநிதி ஒரு ஆலமரம். கருணாநிதி மறைவுக்கு பிறகு அவரது புகழ் வளர்ந்து கொண்டே இருப்பதாக பெருமை கூறினார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Actor Rajini is the one who is in a good state Minister Duraimurugan hits hard


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->